பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 தேவார ஒளிநெறிக் கட்டுரை சிவனடி நீழல், சீர், செம்மை, செல்வம், ஞானம், கூவம், திரு, திருத்தம், தீபமனம், தீர்க்கம், துஞ்சலில்லா உல கம், துணிவு, துறவு, தெளிவு, தேசு, நல்லகதி, நல் லுணர்வு, நல்வாழ்வு, நல்வினை, நலம், நன்மை, நிலை, நிறை, நெறி, நேசம், பகைமையை வெல்லுதல், . பக்தி, பயன், பரலோகம், புகழ், பெருமை, பொன்னுலகு, மதி, மலர்மகள் துணை, மன்மதன் என ஒளி, முத்தி, மேலுல கம், வானரசு, வானுலகம்,விண்ணவராற்றல், வீடு, வையம் ஆதிய சகல பாக்கியங்களும் கைகூடும். 168. வழிபடாக்கால் வருவன (402) இறைவனை வழிபடாக்கால்:-கூற்றம் கொல்ல எழும், திநெறி சாரும், வினை பொங்கி வரும், பினி யாக்கை மருவும், பாவம் விலகாது, வான் கிட்டாது, ஊனம் ஒழியாது, ஞானம் கைகூடாது, துயர் தீராது, பரகதி காண இயலாது. வழி படாதவரை ஏழையப் பேய்கள்’ என்ன லாம். 169. வாத்தியங்கள் (414-427) 1. இடக்கை, உடுக்கை, கத்திரிகை, கல்லவடம், குடமுழா, குழல் , கொக்கரை, கொட்டு, கொடுகொட்டி, சங்கு, சல்லரி, தக்கை, ககுணிச்சம், தண்டு, கண்ணுமை, தமருகம், தாளம், தடி, துத்திரி, துந்துபி, படகம், பறை, பேரி, மணி, முரசு, முரவம், முழவம், மொங்தை (மோந்தை), யாழ், வீணை -எனப்படும் ஒலிக் கருவிகள் கூறப்பட்டுள்ளன. இவை தம்முள்: (i) கல்லவடம்-சிவபிரானுக்கு உகந்தது. (ii) குழல்:-இது கொளைக் கருவி. ஆயன் தனது கைக் குழலை ஊத மேதிகள் (எருமைகள்) ஒன்று சேரும். (iii) கொக்கரை:-அழகிய ஒரு கருவி. H (iv) கொட்டு:-இது நடத்தின் பொழுது உபயோகப் படுத்தப்படும். m (w) தக்கை:-இது ஒரு கொட்டுங் கருவி.