பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 தேவார ஒளிநெறிக் கட்டுரை வெண் மருப்பைக் கீழ்ந்து அதிலுள்ள குருத்தைச் சிங்கம் உண்ண அம்மருப்பிலுள்ள முத்துக்கள் உதிரும். மலையில் வில்லேந்திய வேடர்கள் வழியில் வருவார்க ளாதலால் அவ்வழியில் வரச் சிங்கமும் அஞ்சும். கயிலை, காளத்தி, கோகரணம், ஈங்கோய்மலை, திருகணு-பவானி, கொடுங் குன்றம் (பிரான்மலை), முதுகுன்றம்- இங்கு சிங்கங்கள் உலவினது கூறப்பட்டுளது. சிவபெருமான் சிங்க உரித்தோலுடை புனைந்துள்ளார். மங்கையர் தம் அரை (இடை)க்குச் சிங்கம் உவமை கூறப்பட்டுளது. அரி, அரிமா, ஆளரி, கோளரி, வாளரி, சீயம், மடங்கல். சிங்கத்தின் பிற பெயர்கள். (2) ஆடு:-ஆடுபோல நரை-என 2- lெ டப் கூறப்பட்டுளது. - (3) ஆளி:-கடிய குரலுடைய களிறும் பிளிற இடி போன்ற கொடிய குரலுடன் மலைச்சாரல்களின் பக்கங் களில் ஆளித் திரள்கள் சாரும். ஆளியின் வருகையை, உணர்ந்த யானை வழியெல்லாம் துளி எழ ஒடி ஒளியும். மத்தக்களிறு மலையைக் குத்தி மலைக் குகையிற் பதுங்கி வைகும். யாளி வாகனமாகும். அண்ணுமலை, கொடுங்குன்றம், கயிலை, முதுகுன்றம் என்னும் இடங் களில் ஆளி இருந்தது கூறப்பட்டுளது. H (4) ஆன் (பசு):-இறைவன் அபிஷ்ேகத்துக்கு ஐந்து பொருளைத் தரும். இவை ஆனஞ்சு. எனப்படும்; (நெய், பால், தயிர், வெண்ணெய், திருநீறு போலும்). பசுக் கூட்டங்கள் மழைக்கு அஞ்சி மலைச்சாரலில் ஒதுங்கி கிற்கும். பசு (கருமதேவதை) சிவபிராற்கு வாகனம். (ஆன்ம நாயகராதலால்) சிவபிராற்குப் பசுபதி” என்று பெயர். பசு-சிரேஷ்டமான உயிராதலின் வாழ்க ஆணினம்’ என வாழ்த்தப்பட்டுளது. H (5) எருது:--இதன் அடி துடி போலிருக்கும். குர்ல் இடிபோலிருக்கும். உழுதற்கு உதவும். பொழிலில் தாம் . i. கேட்டுணர்ந்த மறைகளைக் கிளிகள் ஒதப் பக்கலிலுள்ள விடைக் குலங்கள் அவை தமைப் பயிலும் எருதுக்குப்