பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30. சந்திரன்

25

- இல்லையென்று சொல்லாமலும் ஈந்து மகிழ்ந்த பெரியோர்களும், கற்பக விருக்ஷம் போலவும் - மாரி போலவும் கேட்டதை வரையின்றி அளித்த செல்வர்களும், பக்தர்களும் - திருநீறு அணிந்தவர்களும் யாது விரும்பினர்களோ அதை ஒளித்தலின்றி அளித்த மேன்மையாளர்களும், பலபல அறங்களைப் பயிற்றிவந்த அறிஞர்களும், மழையின்றி வளமின்றிப் பஞ்சம் புகுந்து வருத்துங் காலத்தும் தமது வண்மை குன்ருத வள்ளல்களும், யாது காரணத்தாலும் புலவர் மாட்டு வெய்ய மொழி கூருத பெருங்குணச் செல்வர்களும் சுவாமிகள் காலத்தில் இருந்தார்கள். புலவர்களும் கற்றவர்களும் நன்கு ஆதரிக்கப்பட்டார்கள். அத்தகைய பெரியோர்கள் இருந்த காரணத்தால் கலியின் கொடுமை அடங்கி யிருந்தது. ஐயம் என்போர்க்குச் சதா சோறளிக்கப்படும் மனைகள் வாய்ந்த தலங்களும் இருந்தன.

29. சங்கு, சங்கம் [66]

சங்கங்கள் கடலிற் பொலிவன: வெண்ணிறத்தன ஒளியோடு கூடிய விலை யுயர்ந்தன: நுனை மூக்குடையன; முத்தம் ஈனுவன; திரையால் மோதப்பட்டு இரவில் கரையிலும், திடலிலும் சேர்வன. திரையால் உதையுண்டு சரிந்து, இரிந்து, ஒசிந்து, அசைந்து, இசைந்து கரையில் வெண்மணர் குவையிற் சேர்வன. திரையால் அலைப்புண்டு கடற்கரையிற் புன்னை மர நீழலில் வந்து கிடப்பன. உருவத்தில் மிக்கனவாய் வன்மையுள்ளனவாய் ஒளிரும் சங்குகள் உண்டு. தோடுகளும், வளையல்களும், சங்குகளாற் செய்யப்பட்டு அணியப்பட்டன.

30. சந்திரன் [246]

கலைகளை உடையவன்; வெண்ணிறத்தவன்; இயக்கம் உடையவன்; குளிர்ந்த கிரணங்களே வீசுபவன்; மாதர்கள் முகத்துக்கு உபமானம் கூறப்படுபவன். கூனலையும் முயல்போன்ற கறையையும் உடையவன்; வானிற்