பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தேவார ஒளிநெறிக் கட்டுரை

கவணென அவைமேல் வீசி அவைகளை வெருட்டி ஒட்டித் தினைப்புனத்தைக் காப்பர். வேடர் மடவார் பரண் மீதிருந்து ஆயோ எனக் கூவிக் கிளிகளை ஒட்டுவர். வேடர்கள் மலையிற் புனத்திற் காரகிற் கட்டையை விறகாக உபயோகிப்பார். அதன் புகை எங்கும் நிரம்பி மணம் கமழும். மலையில் ஆண் குரங்கு நீண்ட மூங்கிலைப் பற்றி நிருத்தஞ் செய்ய அங்குக்கூடிய வேடுவர்கள் கூச்சலிட்டுக் கைம்மறிப்பர்.

குறச் சிறுமிகள் அழகியர். சங்கவளை தரித்திருப்பார். குறப்பெண்கள் மலைச்சாலிற் கூடி மூங்கில் உகுத்த முத்துக்களைக் குவித்து முத்து வாங்குங்கள் என்று ஆடியும் பாடியும் விலைகூறி அளந்தளிப்பார். மணிகளையும் முத்துக்களையும் குறச்சிறுமியர் கூட்டி முறத்திற் கொழித்து மணிகளை விலக்கி முத்துக்களை உலையில் இடுவார். குறவர் புனத்திற் குவித்து வைத்த பருமணி முத்துக்களை அருவித் திரள்கள் அடித்துக் கொண்டிழியும். குறவர் மயிர் உலர்த்த (இடும் புகை) வாசனை வீசும். வேங்கைமரம் மலருங் காலம் புனவர் மணஞ்செய்து கொள்ளுங் காலமாம். சங்குவளை பூண்ட குறமாதர்கள் கையில் ஏந்திய குழந்தைகள் இரவில் நிலாவைத் தாவிப்பிடிக்கும்.

கோகர்ணம் என்னுங் தலத்தில் மறவாணரும் வேடரும் நெருங்கிக் கூடி நதியிற் படிந்து மூழ்க அவர்கள் தத்தம் பழிதீர அருள்பெற்றனர்.

6. வேளாளர்:- ஆக்கூரில் இருந்த வேளாளர் ஈதலிற் சிறந்தவராய் விளங்கினர்.

35. சாரல் (மலைச்சாரல்) [83]

மலைச்சாரல் அழகு வாய்ந்தது. காலத்துக்கேற்ப வெம்மையுங் குளிர்ச்சியுங் கொண்டது. சாரலில் மேகங்கள் படிந்து தவழும். குருந்தம், குவளை, கோங்கம். கோடல், மல்லிகை, மாதவி மலரச் சாரல் குளிர்பூஞ் சாரலாகத் திகழும். சாரலிற் பலா, வாழை, மூங்கில்