பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42. சிவபிரான் திருவுருவம்

39

42. சிவபிரான் திருவுருவம் [102]

1. அடி (கால், சேவடி, சரணம், தாள், பாதம்):- சிவனார் திருவடி, அடியார் சிரத்திற் கொள்ளும் பூ. அது கழலொலிப்பது; கேடிலாதது; அடியாரைக் காப்பது; இமையோர் ஏத்துவது; பத்தி செய்யிற் கிடைப்பது; பிணி நோய்க்கு மருந்தாவது; மந்திரமாவது; தோற்றத்துக்கு ஆதரவானது; பிரமன், மால் போற்றுவது; காலனை வீட்டியது; திரிபுரம் எரித்தது.

நெஞ்சே! நீ உய்ய வேண்டினால் பெருமான் திருவடியைத் தியானித்துக் கொண்டிரு. நாளும் அத்திருவடிகளை ஏத்தி ஆடிப் பாடினால் கூற்றுவன் நலியான்.

கால் (சரணம், சேவடி):- அரிய நடஞ்செய்வது, கழலணிந்தது, கூற்றை உதைத்தது, வழிபடப்பெறுவது, இமையோர் பரவுவது, புறச் சமயிகள் தரிக்க ஒண்ணாதது, பஞ்சின் நுண் துகில் போன்றது, மலர் போன்றது, (வீரத்துக்கு) அறிகுறியாயுள்ள கழலணிந்தது.

தாள்:- தொண்டர்கள் போற்றுவது.

பாதம்:- வானவர் போற்றுவது, தாமரைப்பூ போன்றது, குறைவிலாதது, சீர்கொண்டது, கழல் சூழ்வது, தேசுமிக்கது, நலமார்ந்தது, நிகரிலாதது, மறையோர் ஏத்துவது, கசிவு தருவது, கவர்வது, மதி போன்றது, வலிகொண்டது, விதியாவது, விளைவாவது, கதியாவது.

2. அரை:- எலும்பாபரணம் பூண்டது. புலித்தோலும் அரவமும் கட்டியது.

3. அல்குல்:- கோவணம் அணிந்தது.

4. ஆகம் (உடல்):- மலை போன்றது, எரி உருவத்தது, உமையம்மை பாகத்தது, செந்நிறத்தது.

5. உரு, உருவம்:- அடிமுடி அறியமுடியாதது, எரிபோன்றது, அரியின் உருவம் கலந்தது, அரிவையின் உருவமும் சேர்ந்ததால் இரண்டு உருவம் கலந்தது, இன்ன உரு என்று அறிய ஒண்ணாதது, எங்கும்