பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47. சிவபிரான் எரியாடுதல்

45

45. சிவபிரானது கொடி [110]

சிவபிரானுக்கு எது ஊர்தியோ அதுவே கொடி. எனவே, அவர் கொடி “இடபக் கொடி”. “பெற்றொன்றுயர்த்த பெருமான்” என அழைக்கப்பட்டுள்ளார்.

46. சிவபிரான் கையில் உள்ளன [109]

[சிவபிரான் ஏந்தியுள்ள படைகள்-தனித் தலைப்பு] 120-பார்க்க.

சிவபிரான் தமது திருக்கையில் ஏந்தியுள்ளன:-

அக்கு, எரி, (வடவா முகாக்கினி), கங்கணம், கல்லவடம், கொடுகொட்டி, சிரந்தை (தமருகம்), பறை, பாம்பு, பேரி, பொக்கணம், மான், யாழ், வீணை, வெண்டலையோடு. மான் இடது கையிலும், மழுவும் எரியும் வலக் கையிலும் கொண்டுள்ளார்.

அவர் ஏந்திய எரி:- திரு நடனம் ஆடும்பொழுது எரி வீசி யாடுவர்.

அவர் ஏந்திய வெண்டலை:- பிரமனது படுதலை; அயனது வெண்டலையை இறைவர் அருவராது கையிற் பிடித்து அதிலேதான் பலியேற்று உண்பர்.

அவர் கையில் அணிந்துள்ள பாம்பு:- ஆடரவம், ஐந்தலை அரவம், காராவம் (கரிய பாம்பு), பட அரவம், அனலுமிழும் நாகம், வெங்கண் மாசுணக் குட்டி என விளக்கப்பட்டுளது.

அவர் ஏந்திய மான்:- இளமான், கலைமான், துள்ளு மான், மான் கன்று. இதனைத் தமது இடது கைவிரலின் நுனிமேல் நிலையாகத் தரித்துள்ளார்.

அவரது யாழ்:- இனிய இசை தருவது.

அவரது வீணை:- ‘மழலை வீணை’ எனப்பட்டுள்ளது. ஒலி மல்கியது, கீதம் நிறைந்தது, பண்பொலிந்தது. இவ்வீணையை இறைவன் தடவி இசைதரப் பயில்வர்.

47. சிவபிரான் எரியாடுதல் [138 (1)]

சிவபிரான் அங்கையில் அனலேந்தி, சுடலையில், நள்ளிருளில், கொள்ளித் தீ விளக்காகப், பாரிடமும்