பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. சிவனது தன்மை, பெருமை, குணங்கள்

55

அமணர் நாடிய தேவரெல்லாம், அமரர்கள், அயன், அரிவை(தேவி), அருந்தவத்தோர், இசையவர், இமையவர், இரவி, உம்பருள்ளார், உலகெலாம், எண்டிசையோர், கணங்கள், கற்றவர், கின்னரர், சித்தர், சீவரத்தர், நாடிய தேவரெல்லாம், சுரர், ஞாலமெல்லாம், தானவர், தேவர்கள், தொண்டர், நரர், நான்மறை, நெறி நீர்மையர், பத்தர்கணம், பல்கணம், பல்கோடி உருத்திரர், பவளவாயார், பாரிடத்தவர், பாவாணர், புரந்தரன், புலவோர், பூதகணங்கள், பெரியவர், மடமான் விழியார், மண்ணினார், மறையவர், மாதவர், மால், முடியார்மன்னர், முடியுடை அமரர்கள், முநிவர்கள், மூவர், மூவுலகு, மெய்த்தவத்தோர், மேலார், வாய்மையினார், வானகத்தர், வானவர், விச்சாதரர்கள், விண்ணுலகம், விண்ணோர், விழுமியோர்கள், வேதம்பலவும், வேதியர், வையகத்தார், இங்ஙனம் யாவரும் (எல்லோரும்-பலரும்) இறைவனை ஏத்துவர். அவரைப் பரவாதாரில்லை

25. படைப்பாதிக்குத் தலைவர் [124 (158)]:- ஏழுலகிலும் உயிர்வகைகளைப் பிரித்தவர். தமக்கோர் உருவிலாமலே உருவுசெய்தவர்; தாம் ஒரு கருவிலிருந்து வாராமலே எல்லாக் கருவிலும் தாம் இருப்பவர். எண்பத்து நான்கு லக்ஷவகையான உயிர்வகைகளைப் படைத்து அவ்வுயிர்களுக்கு உயிராய், அங்கங்கே நிற்பவர். உலகத்துள்ள எண்ணிலாப் பொருள்களையும் படைத்தவர். உலகில் உயிர், நீர், நிலம், இவைதமைக் கண்டவர், உலகத்தை உய்விப்பவர், கேடும் பிறவியும் ஆக்கினவர்; தோற்றமும் கேடும் உயிர்களுக்கு வைப்பவர்; ஊழியந்தத்தில் இருவர் (அயன், மால்) எலும்புகளை ஆபரணமாகத் தரித்துப் பழைய வண்ணமே எல்லாம் படைப்பவர். படைக்கவும், அளிக்கவும், அழிக்கவும் மும்மூர்த்திகளானவர்; பல உலகங்களிலும் உயிர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாய் நின்று காண்பவர்; விண், மண், மறைகளைத் தோற்றுவித்தவர்; உயிர்களை விழுங்குவர், உமிழ்வர்.

26. பண்பு [124 (159)]:- சமணர், சாக்கியருக்கு அருளாத பண்பினர் இறைவர்; நண்பினர் இறைவரை