பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தேவார ஒளிநெறிக் கட்டுரை

38. பொருளாவர் [124 (184)]:- வேதம், அங்கம் இவற்றின் பொருளானவர். சொற் பொருளாகி நின்ற ஆதியானவர்; இயலிசைப் பொருளானவர்; உயர்பொருளானவர்; உரையுலாம் பொருளாய் உலகை ஆளுடையார். ஈருருவப் பொருளாயிருக்கும் இவரை அடைதல் பெரிதும் அரிது; பிறிதின்றி எல்லாம் நானென நிற்கும் பொருளாகி நிற்பவர்; ஏழிசையின் பொருளானவர்; சொல் தெரியாப் பொருளானவர்; பரம்பொருளானவர்; தேடுவார் தேடும் பொருளானவர்; ஞானப் பொருளானவர்; மறையோதும் ஒண்பொருளானவர்; இவரே இருவருமாவர், மூவருமாவர் எனக்கூறவும், அடைதற்கரியதுமான பொருளானவர்; மேலோர் பொருளானவர்; விளைபொருள் தானாகிய தலைவர்.

39. மருந்து ஆவர் [124 (191)]:- தேவி காதலிக்கின்ற மருந்து இறைவர்; தீவினைக்கு மருந்து அவர்; பிணி, நோய்க்கு மருந்து; வானவர்க்கும் கானவர்க்கும் மருந்து.

40. மறக் கருணையின் பாற்பட்ட தன்மைகள் [124 (194)]:-கூற்றை உதைத்து வேதம் பாடுவார் இறைவர்; நாடிப்பார்க்கின் அச்செயல் இறைவன் அருட்டிறத்ததாம். அன்பிலாரை இழிப்பார்; குறறம் அவர்; கொலையாவர்; திரிபுரத்தைக் கூட்டழித்தார்; துயரவர் துயரொழிப்பார்; துன்பம் அவர் - துன்பம் ஒழிப்பார்; நல்குரவு, இன்பம், இரண்டும் அவர்; வினையவர்.

41. மெய்யர் [124 (207)]:- இறைவர் மெய்யர்; பொய்ம்மை தீர்ந்த புண்ணியர்; பொய்யிலி; தம்மைப் போற்றிப் பணிவாரை மெய்ந்நெறியில் வைப்பவர்; அடியவர் துயரைக் களையும் வாய்மையர்.

42. யார் மாட்டு இறைவர் இருப்பார், அருளுவார் [124 (208)]:- இறைவர் தமது அருட்குரிய அடியார் திறத்து இருப்பார். அரிய தவம்புரிய முயல்பவர் மாட்டு உதவுவர்; புன்னெறியை விலக்கினர் பால் இருப்பார்.

43. யாருக்கு அரியார், சேயார் [124 (209)]:- அமரர்க்கும், முநிவர்க்கும் சேயவர்; அயன், மால்