பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தேவார ஒளிநெறிக் கட்டுரை

றீரே! அங்ஙனம் இரத்தல் வறுமை காரணமாகவா? உம்மை அயலார் கண்டால் இகழ்வாரே!

55. சிவபிரான் பஞ்ச பூதத்திலும் மருவி யுள்ளார் [176]

நிலம், நீர், தீ, கால், விசும்பு - இவ்வைந்து பூதங்களு மாகி நிற்கின்றார் இறைவர்.

56. சிவபிரானது அட்டவீரச்செயல்கள் :

{{gap}}1. அந்தகாசுரனைச் சங்கரித்தது [85]:- ‘அரக்கர், அசுரர்’-என்னும் தலைப்பைப்-5-(i) பார்க்க.

2. காமனும் ரதியும்; காமதகனமும் [59,86,385]:- மன்மதன்-அனங்கன், ஐங்கணையோன், கருப்பு வில்லி, காமன், சுறவக்கொடியோன், மதனன், மால்மகன்,வேள் என்னும் நாமங்களைக் கொண்டவன்; அழகன்; உருவிலான்; திருமால் புதல்வன்; மீனக்கொடியோன்; மலர்ப்பாணத்தான், கரும்பு வில்லோன்; சிவபிரானைப் பர்வத புத்திரியாகிய பார்வதியுடன் அணைக்கவேண்டி விண்ணவர்களால் சிவபிரானிடம் அனுப்பப்பட்டவன். சிவபிரான் அறமுரைத்து ஞானநிலையில் இருந்தபொழுது துாரத்தில் நின்று அவர்மீது பாணம் எய்திக் களித்தவன். அவர் கோபித்து நெற்றிக்கண்ணே விழிக்க அக்கண்ணி னின்று போந்த நெருப்பாற் பொடியாகி உருவழிந்தவன். அவன் தேவி நிகரிலா அழகு வாய்ந்தவள். அவள் சிவபிரானை வேண்ட அவர் அவனை அவளுக்கு அளித்தருளினர். காமனை எரித்தபோது மால், அயன், இந்திரன் அஞ்சினர். உலகு செழிக்கவேண்டிக் காமனை ஈசன் எரித்தார். திரிபுரம் எரித்த பின் காமதகனம் ஆயிற்று போலும்: காமனை உருவழிய விழித்தது இறைவனுக்கு ஒரு பெருமை.

3. காலனை உதைத்ததும், மார்க்கண்டற் கருளியதும்[87]:- மார்க்கண்டரது சிவபூஜைத் தொண்டு கலங்கத் தழலெழுவிழியுடன் கூற்றுவன் போந்தான்;