பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முகவுரை

திருத்தணிகேசன் துணை.

தமிழ்விர கனதுரை ஒருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழில் மலர்மகள்
கலைமகள் சயமகள் இனமலி புகழ்மகள்
இசைதர இருநில னிடையினி தமர்வரே.”

--தேவாரம் (சம்பந்தர் 20)

திருத்தணிகேசனது திருவருளேயே துணையாகக் கொண்டு “தேவார ஒளி நெறி” என்னும் பெயரொடு தேவாரத்துக்குப் பெரியதொரு ஆராய்ச்சி எழுத விரும்பினேன். தேவாரத்தில் உள்ள பல பொருள்களேயும் அவ்வப் பொருளின் வழியே அகராதி முறையாகத் தொகுத்து விளக்கிக் காட்டும் ஆராய்ச்சியே எனது சிற்றறிவுக்குத் தக்கதொரு தொண்டு எனக் கருதினேன். அத்தகைய கருத்துடன் முதலாவதாகத் திருஞான சம்பந்தப் பெருமானது தேவாரத்தை ஆய்ந்து நானூற்று அறுபத்து ஆறு தலைப்புக்களின் கீழ் விரிந்ததொரு ஆராய்ச்சி அகராதி எழுதி முடித்தேன். அந்நூல் மிக விரிந்த அளவினதான காரணத்தால் அதன் வெளியீட்டுக்கு வேண்டிய பொருள் வசதி யில்லாது போயிற்று; அதனால் அந்நூலைப் பகுதி பகுதியாக வெளியிடலாம் எனத் தோன்றி ஒரு சிறு பகுதியை இப்பொழுது அச்சிட்டு வருகிறேன். அப்பகுதி வெளிவர இன்னும் சில மாதங்களாகும். அதற்குள் அவ்விரிந்த ஆராய்ச்சி முழுமைக்கும் சாராம்சமான விஷயங்களை வசன ரூபமாக ஒரு தனி நூலாக வெளியிடின் ஸ்ரீசம்பந்தப் பெருமானது தேவாரத்தில் உள்ள விஷயங் கள் யாவும் எளிதில் ஓரிடத்திற் கண்டு களிக்கப் பயன்படுமென்னும் ஆசையுடன் இத் “தேவார ஒளிநெறிக்