பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தேவார ஒளிநெறிக் கட்டுரை

60. இருவரும் சிவனும் [211]

திருமாலும் பிரமனும் போகம் பொலிய அழகாய் வாழ்வதற்கு மூலாதாரம் இறைவன் தேவியோடு பிரியாது அமர்ந்திருத்தலே. அயனும் மாலும் தொழ இறைவன் தேவியை அணைந்து பிரியாதிருப்பன். இருவரும் அறியாத ஒருவன் இறைவன். அவன் இருவருக்கும் வள்ளல். இருவரொடும் ஒருவனாயும் நிற்பன். இருவரையும் தணிவிப்பவன் அவனே. அவன் பெருமை இருவராலும் அளப்பரிது. இருவரும் பரவும் அரசே என்று இறைவனைப் போற்ற வினைபோம். இருவரும் அறியாப் பெருமையது இறைவர் தம் திருநீறு. இறைவர் வேறு மலரோன் மாலோன் வேறு அல்ல. இருவரொடுங் கூடிய இவர் ஊழி முடிவில் அவ்விருவருடைய எலும்பைத் தரிப்பர். பண்டுபோல எல்லாவற்றையும் பண்ணுவர். (ஊழி முடிவில்) அவ்விருவடைய உடற்பொறையுடன் திரிவர். இருவரும் இறைவனைப் பூசித்த தலங்கள்-இராமேசுரம், திருவுசாத்தானம், மழபாடி.

61. சிவபிரான் நஞ்சம் உண்டது [125]

மாலும், பிரமனும், தேவர்களும் அமுதுண்ண விரும்பிக் கடலைக் கடைந்தார்கள். மலையை மத்தாக நட்டு, பெரிய பாம்பைக் கயிறாகச் சுற்றித் திருமால் தேவர்களுடனும் அசுரர்களுடனும் சலசல எனக் கடலைக் கலக்கிக் கடைந்தனர். அப்பொழுது உலகில் உள்ள உயிர்களெல்லாம் பயப்படும்படி விஷம் எழுந்தது. அது மண், விண் எங்கும் பரந்தது. வானவரும் தானவரும் பலருங் கலங்கினர்; ஓடினர்; மேனி கருகினர்; திக்கற்றவர்களாய், அஞ்சி, அமரரும் முநிவரும் சிவனிடம் சென்று “தேவா! அரனே! சரண்; எங்களைக் காத்தருள வேண்டும்” எனப் பணிந்தனர்; ஓலமிட்டனர், பல்லுயிரும் படுந்துயரத்தைக் கண்டு சிவபிரான் இரங்கி, முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்கவும், பேய்க்கூட்டங்கள் தம்மைச் சூழவும் எழுந்துபோய், வானவர்பொருட்டு