பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75. சிவனும் விசயனும்

81

சூழ வேட்டுவ உருவுடன்சென்று விஜயனுக் கருளினர். பூதகணங்கள் அவர் சந்நிதிவாயிலிற் காத்து நிற்கும். இறைவன் ஆடும்பொழுது பூதங்கள் இசைபாடும், அவர் சரிதங்களை இசை கூறும், அவர் பக்கத்திலிருந்து பணி செய்யும், மறை பாடும், கீதம் பாடும், சொக்கதாண்டவம் ஆடும், பாடும், இறைவனது விடைமுன் குனித்தாடும். தண்டு, காளம், கண்ணுமை, கொடுகொட்டி, குடமுழா, பறை, குழல், யாழ், தக்கை, மொந்தை, முழவு முதலிய வாத்தியங்களை ஒலிக்கும். இறைவனைத் துதிசெய்யும்; போற்றும். பூதங்கள் காக்கும் ஊர் பிரமபுரம் (காழி). பாரிடம் பூதங்கள் பணிசெய்து பூசித்த ஊர் திருப்பைஞ்ஞீலி.

74. சிவனும் பேயும் [347]

சிவபிரான் பேய்க்கூட்டங்களுடன் வாழ்வார், பேய்க் கணஞ் சூழத் திரிவார்; ஆடுவார்; பேயோடும் ஆடுவர்; பேய்க்கனம் அவரைத் தொழுது நிற்கும். பேய்கள் நகைக்கப், பேய்கள் பாட அவர் நடம்செய்வார். பேயுயர் கொள்ளி கைவிளக்காக அவர் எரியாடல் செய்வார்.

75. சிவனும் விசயனும் [444]

அருச்சுனன் பஞ்சவரில் ஒருவன்; அழகன்; வேள் போன்றவன்; வில்லாளி; பதினொரு பெயர்களுடையவன். வஞ்சமனத்தையும் ஐம்புலன்களையும் ஒடுக்கி, நஞ்சை அமுதாகக் கொண்டருளிய நம்பியை நாள்தோறும் தியானித்துப் பூசனை புரிந்து குற்றமற்ற கடுந்தவத்தை இவன் கானகத்தே செய்து கொண்டிருந்தான். அச்சமயம்சிவபிரான் அவனுடைய தவநிலையை அறியவேண்டி வேட்டுவக் கோலம்பூண்டுக் கையில் வில்லு டனும், (வேட்டை) நாய்கள் சூழவும், (வேட்டுவப்) பூத கணங்களுடனும் காட்டகத்தே சென்றனர். அருச்சுனனது ஆண்மையைக் காணச் சென்றனர். தேவியையும் (வேட்டுவச்சியாக) உடனழைத்துச் சென்றனர். கண்டவர் அச்சுறும்படியாகச் (சீழ்க்கை) விளியிட்டுக் கடிதோடிச்