பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 38 தேவார ஒளிதெறிக் తారGణ5 (சுந்தார்) ' கின்ருர். பாடல் பெறுதலில் அவுர்க்கு மகிழ்ச்சி ; பெரு விடிற் பராமுகமாயிருப்பார் ; பலரும் அவரைப் பாடிப் பரவுவர் ; பாடுவாரின் பசியைத் தீர்ப்பார் பெருமான் ; தம்மைப் பாவி நாள்தோறும் பாடுவார்களுடைய வினைப் பற்றை அறுத்தெறிவார் , அரக்கன் ராவணனுடைய ஆற்றலை அழித்து அவன் பாடிய பாட்டுக்கு அன்று இரங்கி அருளின வென்றியாளர் பெருமான். ... • 115. சிவனும் பிரமனும் (126) பிரமற்கும் பெருமான் சிவபிரான்; பிரமகைவும் விளங்குவர் சிவபிரான்; சிவபிரானைப் பிரமன் மந்திரத்தால் வழிபாடு செய்து போற்றி வணங்குவன் ; சுந்தார் போகும் வழியிற் சிவபிரான் பிரமனுதியர் சூழ எதிர் சென்றனர்; பிரமனுடைய தலையே உண்கலனுக ஏந்திப் பெருமான் பலிக்குத் திரிவர். 1 16. சிவனும் புகழும் (127) எம்பெருமான் என்று எப்போதும் புகழப்பட்ட பெருமான் சிவன் ; பழிசேர்தல் இல்லாத புகழான் அவர் ; பொய்யாக அவரைப் புகழ்வார் கூறும் புகழுரையையும் அவர் புகழாகக் கொள்வார். (கிரிபுரத்) தலைவர் மூவரும் அவருடைய திருவடியிற் சாண்புக அம் மூவரும் பொன் னுலகம் ஆளும்படியான புகழ் கொண்டு திருவருள் பாலித்தனர் பெருமான். 117. சிவனும் பூதமும் (128) தாம் ஆட்கொண்ட பல பூதங்கள் பாட நள்ளிருளில் கட்டம் ஆடுவர் பெருமான், அப்போது குள்ளப் பூதங் கள் பறை முழக்கும். பக்தியுடன் பூதங்கள் தென்னத் தெனத் தெத்தெஞ்’ என்று இசை பாடி யாட இடுபிச்சைக் காக உச்சிப்போதில் இல்லங்கள் தோறும் பெருமான் திரிவர். பூதப் படைகள் சூழ விடையின்மேல் பெருமான்