பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r 90 தேவார ஒளிதெறிக் கட்டுரை (சுந்தார்) 121. சிவனும் மறையவரும் (182) அங்கம் வல்ல அந்தணர்கள் தொழுதேத்தும் தலம் திருக்கேதீச்சரம். கிழக்கே சலம் இடும் அந்தணர்கள் தொழு தேத்தும் தலம் திருக்கேதாரம். நாள்தோறும் சந்தி நேரத்தில் பெருமானுக்குப் பூமாலை சிறப்பாக அணிவித்துப் பூசித்துப் போற்றுவர். திருவிழிமிழலையிற் பற்றுடன் வாசம் செய்து நான்மறை ஒதும் நாவினராம் அந்தணர்கள், பண்பு நிறைந்த புண்ணிய நான்மறையோர், நன்னிலத்துப் பெருங் கோயிலிற். பல காலும் நண்புடன் பயின்றேத்திப் பெருமானே வணங்குவர்; விட்டு விலகாத வல்வினைகள் விலகி ஒழிய, மறைகளைப் பாடியாடிச் சதா குற்றேவல் செய்யும் அந்தணர்கள் நீங்காத தலம் கருப்பறியலூர். கடவூர் மயானத்தில் மறையோர் இறைவனை ஏத்திப் பணிவார். அங்க மும் நான்மறையும் வல்ல அந்தணர்கள் பெருமானே அடிபோற்றி வணங்குவர் ; அங்ஙனம் நீங்குத லின்றி அடி பணிந்தும் அவர்களுக்கு அறிதற்கு அரியவர் இறைவர். பூசுரர்களாம் அந்தணர்களின் வழிபாட்டில் விளங்குவர் பெருமான். தூய நெய் கொண்டு வட்டமான குண்டத்தில் எரிவளர்த்து ஒம்பி மறைபயிலும் அந்தணர்கள் சமைத்து நிவேதிக்கும் உணவை உண்பர் பெருமான். (இங்கனம் வேறு உணவுக்கு வழி இல்லாதவர் இவர் என்று தெரிந்திருந்தால் இவர்க்கு நாம் ஆட்பட்டிருக்க மாட்டோம் என்கின்ருர் சுந்தார்). வேத வேள்வியர் வணங்கும் பெருமான் சிவபிரான் ; வேதியரும், விண்ணவரும் மண்ணவரும் தொழுகின்ற நற்சோதி அவர். 122. சிவனும் மறையும்' (வேதமும்) அங்கமும் (183) மறை ஒரு நான்கும் ஆனவர் பெருமான். மறை நான்கினேயும் ஆறு அங்கங்களையும் ஒகினவர்; அவை களுக்கு எல்லைப் பொருளாய் நிற்பவர், பொருளாய் விளங்குபவர்; நான்மறைகளின் பொருளை உரை பெருக H.