பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 * = தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 11. துன்பத்தையும் இன்பத்தையும் கலங் து அதுபவிக்கச் செய்தீர். ஜீவனத்துக்கு வழியை நான் உம்மைக் கேட்டால் நீர்போய் ஒளித்துக்கொள்கின்றீர். - 12. சடை தாழவும், அழகாக வீணை ஏந்தியும், வீதியில், விடைவாகனத்தில் வருவீர், பயனற்ற அடிமையை மகிழ்ந்தீர். o (x) திருமுருகன் பூண்டியில் எதற்காக இருந்தீர் எம்பெருமானே என்றது (*49) 1. எம்பெருமானே வேடுவர் வழிபறிக்கும் இடம் திருமுருகன் பூண்டி. இத்தகைய இடத்தில் ஏன் தேவி யொடும் இருந்தீர். 2. ஊர் இடு பிச்சை கொள்வதன்றி உண்பதற்கு வேறு வழி தெரியாதவர் நீர்; தேவியுடன் (வேடர்கள் ஆறலைக்கும் இடமாகிய இந்தத்) திருமுருகன் பூண்டியில் குடி இருந்து உலவும் தீரம் உடையவராயிருந்தால் ஏன் (வேடுபறி சமயத்தில் எனக்கு உதவாது) இருந்தீர். H 3. முசுக்கள் (கருங்குரங்குகள்) போன்ற பல வேடர்கள் வாழும் முருகன் பூண்டியிற் கீழ்மை அழியப் (பெருமையாக) நீர் பிச்சை ஏற்றுக்கொண்டு எதற்காக இருக்கின்றீர். 4. நீர் முடவர் அல்லீர்! வேறு தடையும் இலாதவர் தாமே ஏறிப்போவதற்கும் இடபம் (ஏறு) இருக்கின்றதே; பின்பு ஏன் (இந்த ஆபத்தான) முருகன் பூண்டியில் இருக் கின்றீர். * - 5. இட்ட பிச்சை உண்பவர்தாமே நீர். பின் ஏன் இந்த (ஆபத்தான இடமாகிய) திருமுருகன் பூண்டியில் இருக்கின்றீர். (வேறு எங்கேனும்போய்ப் பிச்சை ஏற்க லாமே). 6. முருகன் பூண்டியாம் இவ்வூரின் எல்லையை (வழிப்பறிகாரர்களிடமிருந்து) காப்பது என்பது இல்லை யானுல், நீர் ஏன் இங்கு வாசம் செய்கின்றீர்! - t * பதிக எண்.