பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) முறையோ' என்று ப்னிந்தால், வறுமையால் , மெலிந்து வாடினல், நீர் சும்மா இருக்கின் மீர்-நீர்தாம் வாழ்ந்திரும். 5. மாயமான இப் பிறவியைக் காட்டினர், உம்மை மறவாத மனத்தையும் தந்து கண்ணைப் பிடுங்கிக்கொள்வதா யிருந்தால் நீர்தாம் வாழ்ந்துபோம். . 6. நல்ல குலத்திற் பிறந்தோம் ; உம்மை இகழாது ■ எத்துகின்ருேம். பாடும் பக்கர்கள் நாங்கள் ; காங்கள் வழி தெரியாமல் துன்புற்ருல் உமக்குத்தாமே பழி; நீர்தாம் சுகமாய் வாழ்ந்திரும். * 7. இருந்தும், கின்றும், கிடந்தும் உம்மை இகழாது புகழ்கின்ருேம்; அத்தகைய நாங்கள் வருங்கி வந்து உம்மிடம் ஒரு வார்த்தை முறையிடும்படி நீர் வைத்தால் நீர்தாம் வாழ்ந்துபோம். 8. உலகில் உள்ள ஊரெலாம் அறிய என் கண்ணேக் கொண்டீர் ; அகனல் நீர்காம் பழிபட்டீர் ; வாழ்ந்துபோம் நீரே. 9. நீர் என்னைக் கருதி ஆட்கொண்டபடியால், கான் காய் வேண்டினலும் நீர் கனியன்ருே கொடுக்கவேண்டும் ; பேயொடு நட்புக்கொண்டாலும் அதனின்றும் பிரிதல் வருத்தம் தரும் என்பார்களே ! நீர் என்ன செய்தாலும் நான் உம்மைவிட்டுப் பிரியேன். 10. நாய்போலக் கிரிந்து, உமக்கு ஆட்பட்டவர் உம்மிடம் வந்து முறையிட்டால் நீர் வாய் திறவாது இருக் கின்றீர் நீர்தாம் சுகமாய் வாழ்ந்திரும். பிற t- - 1. உம்மீது அன்பு வைத்து, மகிழ்ச்சியுடன் உம்மைப் பலவாறு பிதற்றிப் போற்றி மலரிட்டுப் பூசித்த உம்மை ஏத்தும் அடியார் காத்திருக்க, நீர் பிச்சை எடுப்பது அழகா ! * . • 2 அடியார்கள் உம்மிடம் வேண்டுதற்குக் கூச்சப் பட்டு இருந்தாலும், கூச்சமின்றி வேண்டிலுைம், அவர்