பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) அறிந்த அஞ்சுகின்றேன் ; பெருமானே ! உனது சீலம், குணம் இவற்றின் தூய்மையை நான் உணராததால் இந்தக் கஷ்டங்லையை நான் அடைந்தேன். இங்ங்ணம் கண் இழந்து வேதனைப் படுவது உயிருடனே நரகத்திற்படும் வேதனையா யிருக்கின்றது. எனக்கு உள்ள குறைகளை நீக்கி ஒற்றியூர்ப் பெருமானே! அருள்புரிக. (திருவாரூர்க்குப் போவதற்கு கான் மேற்கொண்ட) வழிப் பயணத்தை கிறுத்தாது போகவே முயல்கின்றேன். நீ என்னை இப்போது புறக் கணிப்பதுபோல உன்னைப் புறக்கணிக்கும் குணம் என் னிடம் இல்லை; (உன்னைக் கியானிப்பதை விடேன் என்ற படி). . - 24. (வட) திருமுல்லைவாயிலில் (69) - ப டு து ய ர் களேயாய் என வேண்டினர். கண் இழந்த காரணம் (69-8): சங்கிலியாரின் விஷயத் தில் நான் பொய்யய்ை நேர்ந்த காரணத்தால் பெருமானே ! நீ என் கண்ணேப் பறித்தாய். 25. திருவெண்பாக்கத்தில் முறையிடும் ஊன்றுகோல் பெற்றதும் (89) : பெருமானே! நான் செய்யும் பிழைகளே ே பொறுத்தருளுவாய் என்ற நம்பிக்கையுடன் தானே நான் பிழை செய்தேன். உனக்குப் பழிவரும் என்பதையும் 器 கினேயாது என் கண்ணே மறைப்பித்தாய். நீ போய் மகிழ மரத்தின் கீழ் இரு என்று நான் உனக்குச் சொன்ன ரகசியத்தை எனக்குக் தெரியாமல் நீ (சங்கிலியிடம்)போய்ச் * சபதத்தை மகிழ மரத்தின் கீழ்ச் செய்யச் சொல் என்று சாமர்த்தியமாய்ச் சொல்லிவிட்டாய். சங்கிலியை எனக்குத் கந்து அவளாற் கிடைக்கக்கூடிய சுகத்தை எல்லாம் எனக்குத் தந்தாய்; இங்ஙனம் எல்லாம் திருவிளையாடல் செய்த நீ இப்போது உனக்கு ஆகாத பகைவனேக் கண்டது போல என் முறையீட்டைப் பொருட்படுத்தாமல்-கேவி யுடன் நீ இங்கு (திருவெண்பாக்கத்துக் திருக்கோயிலில்) உள்ளாயோ' என்று நான் உரிமைப்பெருமையுடன் (எனது இரண்டு பக்கத்திலும் அடியார்கள் நெருங்கித் தொழுதேத்தி கிற்கக்) கேட்டபோது நாம் உள்ளோம் இங்கு; நீர்போம்”