பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) பிறையின் வண்ணத்தையும் நான் என்று கண்டு தொழப் பெறுவேன். 89. திருவையாற்றிற் காவிரி வெள்ளத்தைக் கடக்க முடியாத நிலையிற் பாடியது (77-9) : பெருமானே! கொடிய பசியை உடையவன் ஒருவனைப்போல அதிதீவிர ஆசை யுடன் ஐயாற்றைக் கண்டேன் ; ஆல்ை உன் சன்னி தானத்தை அடைந்து உன்னேக் காணமுடியாதபடி காவிரி யின் வெள்ளம் தடுக்கின்றது. காவிரியின் பெருக்கு எதிர்த்து நீந்த முடியாத நிலையில் உள்ளது. 40. சேரமானுடன் சுந்தரர் கொடுங்கோளுரில் இருந்த போது திருவாரூர்ப் பெருமானுடைய நினைவு வர, அப்போது பாடினது (59-11): ஆரூர்ப் பெருமானே என்னல் மறக்க முடியாது. அவர் காரணமாக, அவர் எனக்குத் தந்த 'பாவை’ காரணமாக, உலகத்திற் சிறந்த ஊராகிய திருவாரூரை என்னல் மறக்கமுடியாது. 41. திருமுருகன் பூண்டியில் வேடுபறி (49) : பெருமானே ! இந்தத் திருமுருகன் பூண்டி வடுகவேடுவர் (தெலுங்கர்) வாழும் இடம். அவர்கள் வளைந்த வில்லைக் காட்டி வெருட்டுபவர். நட்பு கலவாத முரட்டுப் பேச்சினர்; திடீரென வந்து கற்களை வீசி மோதிக் குத்தி வழிபறிப் பவர் ; ஆடையைப் பறிப்பவர் ; பசுக்களைக் கொன்று தின்பவர்; பாவ புண்ணியத்தை அறியாதவர்; கொலை செய்பவர்; கங்தை ஆடை அணிபவர்; அதிலே உடைவாளைச் செருகி வைத்துள்ளவர்கள். விரிதலையர்; கருங்குரங்கு போல்பவர்; முடை நாற்றத்தினர்; வன்கனர். இத்தகையினர் வாழும் இந்த ஆபத்தான இடத்தில் பெருமானே! நீர் ஏன் உம் தேவியுடன் இருககின் மீர் ! நீர் முடவரல்லீர், உமது வாகனமாம் ஏற்றின் கால் ஒடிந்து போகவில்லை; ஊர்ப் பிச்சை எடுத்துண்னும் நீர் இந்த ஊரில் ஏன் தங்குகின்றீர் ; ஊரில் எல்லைப் புறத்தைக் காப்பது இல்லையானல் உமக்கு இந்த ஊரில் என்னவேலை! இங்கிருப்பதன் காரணம்தான் என்ன ? என்ன காவல்