பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.28 தேவார ஒளிதெறிக் கட்டுரை (சுந்தார்) நான் ஏறிச் செல்வதற்கு, வெள்ளையானையை அனுப்பினர். இறைவன் கிருவருளால் (உடல்) பசுகரணங்கள் வேருகி, (உயிர்) பதிமயமாய் வேறுபட்டு விளங்கலாயிற்று. இம் மண்ணுலகில் மந்திரம் ஒன்றும் அறியாதவய்ை, மனை வாழ்க்கையில் ஈடுபட்டு, அலங்கார வேடங்களுடன் பொழுது போக்கிக், குற்றம் புரிந்த தொண்டனுகிய என்னைத் தேவ லோகத்து யானைமீதேறி வரும்படி அருள்புரிந்தார் இறைவர்; அத்தகைய பெருமைக்கு உரியவன நான் ? .ண் துணுலக வாழ்வை விரும்பி, மடவாரை இச்சித்த வினைப்பயனை ஆழ அனுபவித்த என்னே அம் மயக்கினின்றும் விடுவித் தார். தேவர்கள் என்னைச் குழ்ந்து வர நான் ஏறிவருதற்கு ஆனயை அனுப்பினர் கருணுகிதியாகிய கயிலைப்பிரானுர், இந்த அற்புத நிகழ்ச்சியால், மண்ணுலகிற் பிறந்தவர்கள் இறைவனே வாழ்த்தினுல் பொன்னுலகம் பெறுதல் கிண்ணம் என்னும் உண்மையை நான் கண்கூடாகக் கண்டுகொண் டேன்; முன்பு, இறைவா ! நீ யானையை அட்டு உரித்தது. மறக்கருனை ; இன்று எனக்கு ஏறுதற்கு யானையைத் தந்தது அறக் கருனே; தேவர்கள் விருப்பத்துடன் கண்டு. களிக்க இறத்தல்’ என்பதனே ஒழித்து என் உடலை வெள்ளை யானை மீது காட்டுவித்தாய். அழியா உடலோடு செல்லும் இந்த அற்புதத்தைக் கண்டு விண்ணும் மண்ணும் அற்புத அதிர்ச்சி பெற்றன. நான் யானைமீது மலைகளின் வழியே செல்லும்போது (கடல் அரசன்) வருணன் மலர்தூவி என்னை வணங்கினன். ஹாஹா என்னும் ஒலியும், ஆகமங் கள் அறிந்தோர்களின் கோத்திரங்கள் கலந்த வேத ஒலியும் விண்னெலாம் பரந்து விரிய, யானையை அனுப்பி நான் மண்ணுலகினின்றும் விடுபட்டு உய்ய வழிகாட்டினர் இறைவர் ; இந்திரன், திருமால், பிரமன், அ9கு மிக்க தேவ்ர் கூட்டம் என்னே எதிர்கொண்டு அழைக்க, மத்த யானையை அருள்புரிந்தார் இறைவர்; இக் காட்சியைக் கண்ட மந்திர மாமுனிவர் (உபமன்யு முகிவர் ஆதியோர்) யானைமீதுருைழ் இவன் யார் என் அறு இறைவரைக் கேட்க, இறைவர் இவ்ன் நமக்கு வேண்டியவன், ஆரூரன்’ என்று விடை கூறினர். நான் வருணனே நோக்கி (கடலாசே)