பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) சார்வாகத் (துணையாக) இருந்ததில்லை. இறைவனைத் தவிர எனக்குத் துணையாவார் வேறு யாரும் இல்லை. . 7. சம்பந்தர், அப்பர் (பாடிய) தேவாரத்தை அடிக்கடி பாடி ஏத்த இறைவன் மகிழ்வார். 8. ஆரூர்ப் பெருமானுடைய பேரைச் சிரமீது வைத்து மகிழும் அருங்தமிழ் புலவன் யான். . 9. பல கலம் பொருந்திய தமிழால், ஏழிசை பொருந்திய இனிய தமிழால், இறைவனுடைய திருப்புகழை விருப்பத்துடன் பாடுவேன். 10. பெருமான் அடிக்கடி என்னைத் திருத்தி என் சிந்தையில் இடம் கொள்கின்ருர். 11. இறைவர் என் பிழையைப் பொறுப்பார்; என் பேச்சைக் கேட்டுக் கோபித்துக் கொள்ளார்; என் குற்றங் களைப் பொறுப்பார்; பழிச்சொல், பிழைகள் வராதபடி காத்தருளுகின்ருர். அருவினே, பழவினை, செய்வினை, இவை என்னைப் பீடியாதபடி அருள்புரிகின்ருர். எனக்கு உற்ற வெப்பு, பிணி இவைகளைத் தீர்த்து என்னை ஆட் கொண்டார். 12. பெருமானுடைய திருக்கோயில்கள் பலவற்றைக் தரிசி த்துப் போற்றிசெய்து பதிகம் பாடியுள்ளேன். அங்ங்னம் பாடி என் வினேப்பற்றை ஒழித்தேன். 18. கடம்பூர், காழி, காட்ைடு முள்ளுர், கோலக்கா, நாட்டியத்தான்குடி, வலிவலம் என்னும் தலங்களில் இறைவன் காட்சிதாப் பெற்றேன். நாட்டியத்தான் குடியில் அாவாபரணராய் அச்சம் தரும்படியான சோலத்துடன் தரிசனம் தந்தார். - 14. என் மனத்தில் இறைவன் வீற்றிருப்பதால் நான் அவரை எப்படி மறக்கக் கூடும். என் பிறவியின் வோ றத்த கரும்பு அவர். நான் எங்கே போனலும் அங்கே வந்து, என் மனத்தில் என்றும் தங்குவார்; இறத்தல்,