பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) என்க. அங்ங்னமே அவரைச் சாராதார் சார்வும், அவரை கினையாதார் கினைவும், அவரைப் பாவாதவர் பரவுதலும், அவரைப் பேசாகார் பேச்சும், அவருக்கு அடிமை செய்ய மனம் குழையாதவர் குழைவும், அடிமை செய்யப் பயிலா தவர் பயில்வும் பயனற்றனவாம் ; அவரைத் தொழுகின்ற அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையைக் கேட்டும் அவரை மலரிட்டு வண்ங்காதவர்கள் அவர் நம்மை ஆள்கின்ற அன்பின் திறத்தை அறியாதவர்களாம். ஆதலால், வாருங் கள், அவர்க்கு ஆளாக வாருங்கள் என உலகர் பலர்முன்பு அவர்களை நான் (பரிவுடன்) அழைக்கின்றேன். சிவபக்தி எனும் வித்து இல்லாத நெஞ்சினரை விட்டு விலகிடுவேன், விலகிடுவேன்-என்கின்ருர் சுந்தார். 138. சுந்தரரும் சிவனும் (150) () வேகாரணியத்துக்கு அருகில் உள்ள கோடி’ என்னும் கடற்கரைத் தலத்தில்-மக்கள் குடியிருப்பு இல்லாத இடத்தில்-பெருமான் தனியாகக் கோயில்கொண் டிருப்பதைச் கண்டு மிக வருந்திப் பாடுகின்ருர் சுந்தார்:

  • பெருமானே !! கடற்காற்று கடிதாய்க் கரைமேல் மோதுகின்றது ; பக்கத்தில் குடியிருப்பார் யாரும் இல்லை ; இருந்தால் குற்றம் ஆகுமா என்ன ! உன்னே இங்கனம் தனியாகக் கொடியேன் கண்கள் காணுகின்றனவே யார் துணையாக இங்கு இருக்கின்ருய் சுற்றிலும் பெரிய காடு; தேவி அஞ்சும்படி மாப்பொந்தில் ஆந்தைகளும் கோட்டான் களும் குழறுகின்றன. இங்குள்ள வேடர்களோ மிகப் பொல்லாதவர்கள், தீயர் ; போயும் போயும் இங்கே வந்து கோயில்கொண்டனையே; இக் கடற்கரையிற் பல கொடிய வேடர்கள் வாழ்கின்ருர்கள். இரவு தான் உனக்குத் துணையோ! என்ன தைரியத்தால் நீ தனியாக இங்கு இருக் கின்ருய் இருப்பதற்கு வேறு இடம் இல்லாததால், தேவியும் கங்கையாளும் உன் ஆகத்திலேயே இடம் பெற்று இருக்கின் ருர்கள்; இங்கே காடுகாள் (மோடி) என்னும் வனதேவதை தான் இருக்கின்ருள். ---