பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. சுந்தாரும் பார்வதியும் 139. . (iv) சுந்தாரும் சங்கிலியாரும் 1. சங்கிலிக்கும் எனக்கும் பற்ருய பெருமான் இறைவர் ; குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த திருஒற்றியூரைச் சேர்ந்தேன்; சங்கிலியின் மென்தோள், கடமுலை சார்ந்தேன், சார்ந்தேன். அற்பணுகிய என்னைப் பொருட்படுத்தி இறைவன் சங்கிலியோடு என்னைச் சேர்ப்பித்தார் ; மானின் இயல்கொண்ட சங்கிலியால் வரும் பயன்களெல்லாம் தோன்ற அருள் புரிந்தார்; அவள்பொருட்டு என் கண்ணே மறைப்பித்தார்; அவள்மேல் வைத்த காதல் காரணமாக இறைவற்கு ஆளாக இவ்வுலகிற் பிறந்தேன் ; வினே இவ்வாருக, நான் என்ன செய்யக் கிடக்கின்றது; என் வினையை என்னென்றெடுத்துரைப்பது ! (w) சங்கிலியின் வர்ணனை இயல்-மான் போன்றவள். தோள்-மென்தோள். முலை-தடமுலை. மொழி-பண்மயத்த மொழிப் (பரவை) சங்கிலி. 140. சுந்தரரும் பார்வதியும் (152) தேவியைத் தமது பாகத்தில் அன்புடன் வைத்துள்ளார் பெருமான்; தேவியின் திருவடியைப் பற்றி நான் கிரம்பப் பாடுவேன்; அங்ங்னம் பற்றித் திடபக்தியுடன் திருவருளே மிகத் தேடுவேன்; அந்த ஆனந்தத்தில் மிக ஆடுவேன்; இறைவன் திருவடியை (என் குற்றங்களை நீக்கி நான்கொண்டகுறிப்புடன்) நன்கு கட்டுவேன். தேவியின் இளைய மகன் (முருகனையும்) நான் தெளிந்தறியேன்; (அவனே நான் நாடினேன் இல்லை); வயிறு காரிப் பிள்ளையாம் கணபதி யையும், குமரப் பிள்ளையாம் வேலனையும் கோல்கொண்டு கட்டித் தேவி ஆள்வதில்லை; பெருமானே!. நீ வீனன பேச்சுக்களைப் ப்ேசி மாதர்களின் வளைகளைக் கவர்ந்தால், மலேயரையன் மகளான பார்வதி உன் செயலைக்கண்டு பொறுத்திருப்பாளோ ! கூறுக.