பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 141. சுந்தரரும் முருகவேளும் (158) (தலைப்பு 218-ம் பார்க்க) -- பிள்ளைக் குமரன் அங்கையில் வேல் ஏந்தியுள்ளவன்; தாருகாசுரனை அட்டவன் ; தேவியின் இளைய பிள்ளையாம் (முருகனை) நான் தெளிந்தறியேன்; ஆதலால் முருகனே நான் நாடினேன் இல்லை; இம் முருகவேள் சிவபெருமா லுடைய மகனராயிருந்தும் குறவர் மகளே மணந்தார். 142. சுந்தரரும் யோகமும் (154) எனக்கு உற்றவராயிருந்த ஐம்புலச்சேட்டையை ஒழித்து உள்ளத்து உள்ளே உள்ள உண்மைப் பொருளை நான் நன்கு பற்றிப் பிடித்துள்ளேன். நாள்தோறும் (கிட்டை நிலையில்) இறைவனுடைய மலர்ப் பாதங்களே நன்கு தேடுவேன் ; நாபிக்கு மேலே நால்விரல் இடத்தில் நாடி நாடிப் பார்ப் பேன்; அங்கே பரம்பொருளைச் சிக்கெனப் பிடித்து மிக மகிழ்வேன், கூத்தாடுவேன், ஆனந்தக் கூத்தாடுவேன். 143. சுந்தரரும் வனப்பகையும் சிங்கடியும் [155] வனப்பகை-சீர் நிறைந்த ஞானி ; அவளுடைய அப்பன் நான். திருவாரூரைச் சித்தத்தில் வைத்துள்ள புகழைக் கொன்ட் சிங்க்டியின்தந்தை நான். வில் என வளைந்த நெற்றி யையும், கிறைந்த அழகிய கூந்தலையும் உடையவள் சிங்கடி; அவள் உருவ லக்கணம் உள்ளவள்; மை பூசிய அகன்ற கண் களையும், மதுரமான பேச்சினையும், மென்மையையும் உடையவள; நலலவள. கிடைத்துள்ள மாறு பதிகங்களுள் சிங்கடியைப் பற்றி எட்டுப் பதிகங்களிலும், வனப்பகையைப் பற்றி ஒன்பது பதிகங்களிலும் சுந்தார் குறித்துள்ளார்.