பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) செஞ்சொற்றமிழ், செந்தமிழ், தண்டமிழ், திஐகொள் செந்தமிழ், நலத்தமிழ், நற்றமிழ், பண்ணு ரின் தமிழ், பலங் கிளர் தமிழ், பன்னலந்தமிழ், பாவணத்தமிழ், பொய்யாத் தமிழ், வண்டமிழ்-என்றெல்லாம் தமிழ்' விளக்கப்பட் டுளது. கண்டமிழ் நாற் புலவாணர், கலைமலிந்த தென்புலவர்எனத் தமிழ்ப் புலவர்கள் குறிக்கப்பட்டுள்ளார்கள். பண்ணுெடு பாடப்படும் தமிழ்ப் பாடலின் இசைக்கு ஒப்ப, முழவு வாத்தியம் ஒலிக்கப்படும். 148. தலங்கள் (161) 1. அஞ்சைக் களம் (A) அழகிய பொழில் சூழ்ந்தது ; கடற்கரை மேல் மகோதைக்கு அணித்தாயது. 2. அதிகை (88) இத்தலம் மாநகர்-எனப்பட்டுளது; இறைவனுக்குப் பற்றுக்கோடாய (ஆசைக்கிடமாய) பெருமை வாய்ந்த தலம். 粵 3. அரிசிற்கரைப்புத்துர் (9) அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு கிறைந்த தலம்; அழகார் புத்துார் என வழங்குவது; பொழில் கிறைந்தது ; புகழ்த் துணை நாயனர் கைத்தொண்டு செய்து கித்தலும் படிக்காசு (இறைவன் அளிக்கப்) பெற்ற தலம். 4. அவிநாசி (92) இத்தலம் புக்கொளியூர் அவிநாசி எனப்படும். குரங்குகள் ஆடும் பொழில் சூழ்ந்த தலம் ; காடுபோல உயர்ந்த சோலை சூழ்ந்த தலம் : பறவைகள் வாசம் செய்யும் சோலையைக் கொண்ட தலம்; ஆண் குரங்கு உண்பதற்காகப் உள்ள எண் பதிக எண். அவ்வத் திலத்தில் பெயர்க்கு அருகில் () இக்குறிக்குள் ћ