பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) களின் புகழ் விளங்கும் ஊர்; அருமறையும் ஆறங்கங்களும் ஒதப்படும் ஊர்; உலகங்களில் உள்ள ஊர்களில் ஒப்பற்ற ஊர் இது என்று உரைக்கத் தக்க ஊர்; தேவர்கள் வணங்கி ஏத்தும் பெருமான் (கியாகேசர்) வீற்றிருக்கும் ஊர்; ஆடும் கியாகாது ஊர் : இறைவன் விருப்புடன் அமர்க் துள்ள ஊர்; அவர் திருமூலட்டானர், புற்றிடங்கொண்டவர் என்னும் திருநாமங்களுடன் விளங்குவர் ; தேவர்கள் காணிக்கையாகப் பொன்னேயும் மணியையும் துரவி நீயே துணை’ என்று அவரை கித்தமும் வணங்குவர்; குமரன், திருமால், பிரமன் இவர்கள் கூடிய தேவர் கூட்டம் பெருமானே வணங்கித் தொழும். ஆரூர் - யாருடைய ஊரோ, நமது அன்று என்று எண்ணியோ - அவ்வூரை விட்டு அகன்று - கோடி’ என்னும் இத் தனி இடத்தில் தனியாக வீற்றிருக்கின்ருய், பெருமானே நீ - என வேடிக்கையாக இறைவனே வினவுகின்ருர் சுந்தார். ஆரூரின் பெருமையை உணர்ந்து 'திருவாரூர்ப் பிறந்தார் கள் எல்லார்க்கும் அடியேன்” என ஒதுகின்ருர் சுந்தார். 7. ஆருர்ப் பாவையுண் மண்டளி (96) காந்தை, வன்னி, மத்தம், வில்வம் கிரம்பிய சீரை உடைய திருக்கோயில். 8. ஆலங்காடு (பழையனூர்) (52) o பத்தரும், சித்தரும், பிற பலரும், பல சிறந்த மலர்கள் கொண்டும், பண்நிறைந்த இசையுடனும் இறைவனே ஏத்தி வணங்கும் தலம் - பழையனூர் ஆலங்காடு. 9. ஆவடுதுறை (12-10) - הם பொழில் சூழ்ந்த அழகிய தலம் ; இறைவன் வீற்றிருக்கும் கலம் . * 10. ஆனைக்கா (75) அழகிய, குளிர்க்க, நீர் நிறைந்த, நீர்பெருகி மோதும் - தலம் ஆனைக்கி ; உலகோர் உய்ய அப்பு ஸ்தலமாய் ”.