பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) வர்கள் காதலிப்பது; நெறியில் கிற்கும் அடியார்கள் கினைந்து போற்றுவது; வானவர்கள் முடி தாழ்த்தி வணங்குவது. 86. கானப்பேர் (84) வயல் சூழ்ந்தது; இங்கு இறைவன் காளை' எனப் படும் திருநாமத்தவர்; (காளையிசுரர்). 87. காட்ைடுமுள்ளுர் (40) ெ கொள்ளிடத்தின் கரைமேல் உள்ள தலம்; நீர்த் துறை யில் தாமரை மலர்கள் மீது ஏறி அன்னங்கள் விளையாடும்; அங்கு அருகில் உள்ள கழனிகளிற் கரும்புபோல உயர்ந்து பெருஞ் செந்நெல் நெருங்கிய விளைவுடன் பொலியும் ; செந்நெல்களின் அருகே தழைத்த கரும்புகளில் அயலில் உள்ள அகழியில் அருகே தேன் மல்கும் கழனியும், கோட்டங்களும் விளங்கும்; கழனிகளிற் களை பிடுங்குவோர் குவளே மலர்களை வாருவர் ; கழனிகளிற் கருமணிகள் போல நீலோற்பலம் மலரும்; எருமைகள் கழனிகளில் உள்ள செந்தாமரைகளை மேய்ந்து உண்னும் கழனிகளில் தேன் கிறைந்த கருங்குவளை களைக் காணலாம்; கழனிகளில் ஒருபுறம் நாரைகளும் குருகுகளும் பாய்ந்து ஒலி செய்யும். ஒரு புறம் நீர்த்துறைகளில் கெண்டை மீனும் கயல் மீனும் துள்ளி விளையாடும்; கழனியிற் குவளை மலரிடத்தே வண்டுகள் பண் பாடும். சோலைகளிற் பனையும் தெங்கும் கிறைந்து பொலியும்; மாதர்களின் கண்போல விளங்கும் நீலமலர் மலர்ந்துள்ள அகழியின் அருகில் வாழை காடுபோல வளர்ந்து பொலியும்; சோலையில் உள்ள கமுகிடக்தம், இளங் தெங்கினிடத்தும் வெளிப்படும் தேனைப் பருகிக் காளை வண்டுகள் ւմ:-, மயில் கூவும்; முள்ளுடன் கூடிய மடல்களை உடைய த்ாழைகள் மலர்ந்து நறுமணத்தைப் பரப்பும்; கொள்ளிட நதியில் மாதர்கள் குடைந்தாடுவார் ; இருக்கு வேதம் சொல்லும் அந்தணர்கள் வேள்வி இயற்றி நாடெங்கும் நன்மை வழங்குவர்; திரு நிறைந்த செல்வத்தராய அந்தணர்கள் முத்தீ வளர்த்து ஒதுவர்.