பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) கலத்தில், உமது வாகனமாகிய எருதின் கால் ஒடியாது கன்ருயிருந்தால், நீர் அதன் மீது ஏறி இவ்வூரைவிட்டுப் போகாமல், எதற்காக இங்கு இருந்தீர் ! (5) வெளியே செல்வதற்கு வேண்டிய சக்தி இருந்தால் நீர் எதற்காக இந்த ஊரில் இருந்தீர்! (6) பிச்சை எடுத்து உண்பதாகில் நீர் எதற்காக இந்த ஊரில் இருந்தீர்! (7) வழிப்போவாரை வேடுவர் மோதி ஆடையைப் பறித்துக் கொள்ளைகொள்ளும் இவ்வூரில் ஏது காரணம் கொண்டு, என்ன பாதுகாப்பை நம்பி, எதற்காக, நீர் இங்கு இருந்தீர் (8) நீர் முடவர் அல்லீர், உமக்கு இடர் ஏதும் கிடையாது, ஏறிப் போவ தற்கு ஏறுவாகனம் உளது ; அப்படி வசதிகள் இருந்தும் நீர் எதற்காக இந்தத் தலத்தில் தங்கி இருந்தீர்!’ 87. (வடதிரு) முல்லைவாயில் (69) நறுமணம் வீசும் செண்பகச் சோலை சூழ்ந்த தலம்; அடர்ந்த பொழில்களை உடைய தலம்; கிறை நீர் சூழ்ந்த தலம்; பாலாற்றின் வடகரையில் உள்ள கலம்; செந்நெற். கழனிகள் சூழ்ந்த தலம்; கழனிகளின் புது மணத்தை அதுபவித்து வண்டு இசைபாட, (அருகில்) தாமரைப் பீடத்தில் உறங்கும் நண்டுகள் எழுந்து உலவும் தலம்; செம் பொன் மாளிகைகளைக் கொண்ட செல்வ நகர் ; -- எங்குற்ருய் இறைவா! என்று தேடிய தேவர் வந்து சேரும் கலம் ; நல்லவர் பரவும் தலம் ; மாதர்களின் அரிய நடனங்கள் எப்போதும் நடைபெறும் தலம். சொல்லுதற்கு அரிய பெரும்புகழாளம்ை தொண்டைமா லுடைய களிற்றை இறைவன் முல்லைக் கொடியா ற் கட்டிப். பின்பு அவன் எல்லையிலாத இன்பத்தைப் பெறும்படி வெளிப்பட்டு அவனுக்குத் திருவருள் பாலித்த தலம். தம்மை முன்பு வெண்ணெய் நல்லூரில் ஆட்கொண்ட சம்புவே என்று சுந்தார் இத் தலத்துப் பெருமானேப் போத்றுகின்றர். H 88. வலஞ்சுழி (12-10) இறைவ ஊடைய ஊர் வலஞ்சுழி. H a {