பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 2. நடன அரங்கில் மடவார்கள் முழவொலி, குழ லொலி இயம்பப் பாடுவர், ஆடுவர். 3. மண்டபங்களைச் சுற்றிக் கடைகள் விளங்கும். 4. மதில்கள் கற்களால் திண்ணியதாய்க் கட்டப் பட்டுக் கோபுரத்துடன் மிக உயர்ந்து திகழும். 5. மாடங்களிற் கொடிகள் பறப்பனவாய்க், காணு தற்கு இனியனவாய்ச், செல்வம் புலப்படுவனவாய், புத்தம் புதியனவாய் விளங்கும். 6. மாளிகைகள் இடம் அகன்றவையாய், செம்பொன் போலத் திகழ்வனவாய், மிக உயர்ந்தனவாய், மடவார்கள் உலவப் பெற்றனவாய், கிலாமுற்றங்களுடன் பெருமை வாய்ந்து விளங்கும். 7. விதிகள் கிண்ணிய தேரோட அகன்றனவாய், நீளமுள்ளனவாய், மண்டபம், கோபுரம், மாளிகை, குளிகை, மறை ஒலி, திருவிழா ஒலி கூடியனவாய்ப் பொலியும். 8. (1) திருக்கச்சூர் என்னும் தலம்-அங்காடிகள் (கடைத் தெருவுகள்) சூழ்ந்த மணிமண்டபங்களும், புதிய உபரிகை உள்ள வீடுகளும், பொழிலும், நீர்வளமும் கொண்டதாய், இலக்குமி வாசஞ்செய்யும் வயல்களைப் பெற்றதாய் விளங்கும். (2) கலயநல்லூர் என்னும் தலம்-மண்டபமும், கோபுரமும், மாளிகையும், குளிகையும் (நிலாமுற்றமும்), மறையொலி, திருவிழா ஒலி நிறைந்த வீதிகளும் கொண்டு, கண்டவர்களின் மனத்தைக் கவரும் அழகுடன் விளங்கும். (8) திருப்பனையூர் என்னும் தலம்-மண்டபம், மாட மாளிகை, கோபுரம், வளர்பொழில்-இவைகளுடன் விளங் கும்; ஊரெலாம், முழவம் அதிரும்; மாடமாளிகை, மண்டபம், கோபுரம்-இவைகளிற் பண் விளங்க யாழ் ஒசை கேட்கும்; குரங்குகள் பாய்ந்து புகும். f