பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. நாயன்மார் 195. 12. ஏயர்கோன் கலிக்காமர் : ஏயர்குடியைச் சார்ந் தவர். மழைவேண்டி இறைவனுக்குப் பன்னிரண்டு வேலி கிேலம் கொடுத்தவர்; வந்த பெருமழை கிற்கவேண்டிப் பின்னும் பன்னிரு வேலி இறைவனுக்குத் தந்தவர். இவருக்கு உற்ற கொடிய பிணியை இறைவன் நீக்குவித்தார். 18. ஐயடிகள்: காடவர் (பல்லவர்) குலத்தினர். 14. கண்ணப்பர் : இறைவனது கிருவருளைப் பெற்ற வர்: இவர் செய்த குற்றமான செய்கையையும் இறைவன் குணமாகக் கொண்டனர்; பதி உண்மையை உணர்ந்த மெய்ஞ்ஞானக் கலைவல்லவர். (இறைவனுக்காக) அம்பு கொண்டு தமது கண்ணேக் களைந்துகொண்டவர். 15. கணநாதர் : இவர் ஊர் காழி. 16. கணம்புல்லர் : சிவ பிரானது திருவடியையே தமக்குக் காப்பாகக் கொண்ட நம்பி இவர். இவர் குற்றம் செய்யினும் இறைவர் அதைக் குணமாகக் கொண்டார். 17. கலிக்கம்பர் : (சிவனடியாரிடம் வைத்திருந்த மதிப்பால் மனைவியின்) கையைத் தடிந்தவர் இவர். 18. கழற்சிங்கர் : அரசுபுரிந்த பல்லவர் இவர். 18-ஏ. கழறிற்றறிவார் : சேரமான் பெருமாள்' (33) பார்க்க. - - i. 19. காரைக்கால் அம்மையார்: பேயுருவம் கொண்டா ரா.கலின் பேயார்’ எனப்பட்டார். 20. குங்கிலியக் கலய நாயனுர்: இவர் ஊர் கடவூர். 21. குலச்சிறை : பெரிய சிவ பக்காதலின் பெரு கம்பி’ எனப்பட்டார். 22. கூற்றுவ நாயனுர் . இவர் ஊர் களங்தை. பகைவர் பலரையும் வென்ற-(கூற்றன்ன) வீரத்தினர். 28. கோச்செங்கட் சோழன் : தன் வாயிடை நூல் கொண்டு இறைவனுக்குச் சித்திரப் பக்கல் அமைத்த சிலக்கி o |