பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) யின் திருப்பணிக்கு உகந்து அதை மறுபிறப்பிற் கோச் செங்களுன் என்னும் அரசகைச் செய்தார் இறைவர். சிலந்தியின் குற்றத்தையும் குணமாகக் கருதினர் இறைவர். களிற்றுப் படை கொண்ட கோச்செங்களுன் கட்டிய கோயில் கன்னிலத்துப் பெருங்கோயில்; இச் சோழன் தென்னவனுய்ப் பாண்டி காட்டையும் ஆண்டனன். 24. கோட்புலி: பகை மன்னவர் கூட்டத்தை வென்ற வீரர் இவர். அதனல் வேல் நம்பி’ எனப்பட்டார். o 25. சடையர் : சுந்தரருடைய தந்கையார். இவர் கல்லவர் யாரிடத்தும் நண்பு பூண்டிருந்தவர்; திருத் தொண்டத் தொகையைச் சுந்தார் பாடினதற்கு முன்னரே சிவபதம் அடைந்தவர். 26. சண்டேசுரர் : மணலால் இலிங்கம் இயற்றி உண்மைப் பத்தியுடன் மலர்ப்பூசனே செய்தவர். அபிஷேகத் துக்கு வைத்திருந்த பாலைக் கோபத்துடன் காலினல் இடறிய தந்தையின் தாளை மழுவினல் துண்டித்தவர் ; இவருக்கு இறைவர் தாம் அணியும் ஆடை, ஆபரணம், மாலை இவை களே அணியும் அமுக பதவியைத்-தேவர்களும் தொழும் படியான பெரும் பதவியைத்-தந்தனர். இவர் 'தண்டி’ எனவும் கூறப்பட்டுள்ளார். தம்மாட்டுத் தஞ்சம் கொண்ட இவரைத் தமக்குச் சமமான நிலையில் வைத்து மகிழ்ந்தார் இறைவர். 27. சத்தி நாயனுர் : இவர் ஊர் வரிஞ்சை, 28. சாக்கிய நாயனுர் : சிவபிரானது திருவடியை மறவா மனத்தினராய்க் கல் எறிந்து பூசித்த நல்லவர் இவர். இவர் செய்த குற்றத்தையும் இறைவர் குணமாகக் கொண்டனர். |Ir - * 29. சிறப்புலி : சிவனடியார்களுக்கு ஈதலிற் புகழ் பெற்ற வள்ளல் இவர். - * -" 80. சிறுத்தொண்டர் : இவர் ஊர் (திருச்)செங் காட்டங்குடி