பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) [. இசையைக் கேட்கும் ஆசையாலன்ருே அங்கனம் கித்தலும் அவர்களுக்குக் காசு அளித்தார் பெருமார்ை. சம்பந்தப் பெருமான் சோழநாட்டினர் பரவின கருணையங்கடல் ; பாவிரி புலவர் ; திருப்பனையூரைத் கரிசித்துப் பதிகம் பாடினவர்; சம்பந்தரும் அப்பரும் பாடிய திருப்பதிகங் களை அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லியவே சொல்லிப் பாடித் துதிக்கச் சிவபிரான் மகிழ்வர். சம்பந்தர், கணம் புல்லர் ஆதியோர் குற்றம் செய்தாலும் பெருமான் அதைக் குணமாகக் கருதினர்; (திருவலஞ்சுழிப் பதிகத்தில்) சிவபெருமானே! நீர் பலி ஏற்கும் காரணம்தான் யாதோ கூறுமின்’ என விண்ணப்பம் செய்த சம்பந்தால் மெய்ப் பொருளாகக் கொண்டாடப் பெற்றவர் சிவபெருமான். தம் பதிகங்களிற் சம்பந்தரையும் நாவுக்கரசரையும் ஒருங்கு சேர்த்தே பேசியுள்ளார் சுந்தார். 88. திருநாவுக்கரசு : இவர் 4900 பதிகம் பாடினவர், சிவகிறை செம்மையையே செம்மையாகக் கொண்டவர்; இவரும் சம்பந்தரும் பாடியாடிப் பரமனைப் பரவக், தமிழ் கேட்கும் இச்சையால், பரமன் இவர் இருவருக்கும் அடியார்கள் பசியால் வருந்தாகிருக்க மறையோர் கிறைந்து வாழும் திருவிழிமிழலையில் கித்தம் படிக்காசு அருளினர். இவர் பாடிய பாடல்களையும் சம்பந்தப் பெருமான் அருளிய பாடல்களையும் அடியார்கள் சொல்லியவே சொல்லி இறைவனை ஏத்த இறைவன் மகிழ்வார். இவர் குற்றம் செய்யினும் அதைக் குணமாகக் கருதினர் சிவபிரான். 89. திருநாளைப்போவார் : செவ்விய மனத்துடன் தில்லைக்கு நாளைக்குப் போவேன்’ என்றிருக்கவர் ; இவர் குற்றம் செய்யினும் அதைக் குணமாகக் கருதும் கொள்கை -யினர் சிவபெருமான். 40. திருநீலகண்டர் : இவர் குயவர். 41. திருநீலகண்ட யாழ்ப்பாணர் : இவ்ர் பாணர். 42. திருநீலநக்கர் : இவர் ஊர் சாத்தமங்கை.