பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. நாயன்மார் 201 (4) பிரான்’ எனப் போற்றப்பட்டவர் இருவர்சம்பந்தரும், திருமூலரும். (5) பெண்பாலர் மூவர்-காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார், இசை ஞானியார். (6) பெற்ருேர் குறிக்கப்பட்ட நாயனர் சுந்தார் ஒருவரே. (7) வரலாற்றுச் குறிப்புத் தரப்பட்டவர், குறிக்கப் பட்டவர் 28 பேர். அவர் திர்ம்-இயற்பகை, உருத்திரபசுபதி, எறிபத்தர், கண்ணப்பர், கலிக்கம்பர், கழறிற்றறிவார் (சேர மான் பெருமாள்), காரைக்கால் அம்மையார், கூற்றுவர், கோச்செங்கட்சோழர், கோட்புலி, சண்டேசுரர், சம்பந்தர், சாக்கியர், சிறப்புலி, சோமாசி மாறர், கண்டியடிகள், காயர் (அரிவாட்டாயர்), திருக்குறிப்புத் தொண்டர், திருநாவுக் காசர், நரசிங்க முனையர், நாளைப்போவார், நெடுமாறன், புகழ்த்துணை, மானக்கஞ்சாறர், முனையடுவார், மூர்க்க நாயனர், மூர்த்தி நாயனர், மெய்ப்பொருள் நாயனர். 3. தொகை அடியார் ஒன்பதின்மர் (1) தில்லைவாழ் அந்தணர் : இவர்கள் பல்லவ அரசர் களுக்குத் திறை கொடாத சிற்றரசர்களுக்குத் (தில்லைக் கோயில் வழிபாட்டுக்கு உரிய) மாலை முதலிய மரியாதைச் பிறப்புக்களைச் செய்யாது மறுத்து வந்த பெருமையர்கள். காலே, உச்சி, மாலை மூன்று பொழுதிலும் பூஜை செய்து வரும் மூவாயிரவர் இவர்கள். இவர்களுக்குத் தலைவராம் மூர்க்கி சிவபெருமான் (நடராஜ மூர்த்தி) என்பர். (2) பொய்யடிமையில்லாத புலவர் (சங்கத்தார் எனப் படுவர்) ; மாணிக்கவாசகரோ-என்னும் ஒர் ஐயப்பாடும் 1 նII Վեl, - (3) பத்தாாய்ப் பணிவார்கள் (4) பரமனையே பாடுவார் (5) சித்தத்தைச் சிவன்பால் வைத்தவுர் (6) நிருவாரூர்ப் பிறந்தார்கள் (7) முப்போதும் இறைவனது