பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (4) கண் = I. கரு நிறத்தது, நீண்டுள்ளது, அகன்றுள்ளது, குளிர்ச்சி யுள்ளது, மை பூசி உள்ளது; காவி மலர், கெண்டை மீன், மாவடு, மான், வாள் இவை கண்களுக்கு உவமை கூறப் பட்டுள்ளன. - (5) கரம் வளையல் பூண்டது. г (6) கூந்தல் - நறுமணம் உள்ளது, நீண்டுள்ளது, சுருண்டுள்ளது, வளைவு கொண்டது, குரா மலாணிந்தது, வண்டு நாடுவது, கருகிறத்தது. * - (1) தோள் பருமை கொண்டது, வேய் (மூங்கிலை) ஒத்தது. I (8) நுதல் பட்டம் அணிந்தது, பிறை போன்றது. (9) பல் இளமையும் கூர்மையும் விளங்குவது; முத்து, முல்லை போன்றது. (10) முகம் தாமரை போன்றது. (11) முலை நிகர் அற்றது, பருமை கொண்டது, கச்சி அணிந்தது, மணிவடம் ஆதிய பூண் அணிந்தது, நெருங்கியது, மென்மை கொண்டது, அழகியது, இளமை வாடாதது, அரும்பு, சூதாடுகருவி, தெங்கின் இளங்காய் (இளநீர்) போன்றது. (12) மேனி T [. அழகுள்ளது, மின்னல் போல ஒளி பொருந்தியது.