பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) மரம்-செடி-கொடி-இவற்றுள்-வாழை, மா, பலா, கமுகு, கெங்கு, பனே, காழை, குரவம், மாதவி, புன்னே முதலிய காணலாகும்; புன்னை வெண்முத்தரும்பி, பொன் மலர்ந்து, பவள ஒளியின் அழகைக் காட்டும் ; குரவம் நறுமணம் வீசும்; மாங்களிர்கள் எரிகிறம் காட்டும் ; கமுகின் ஒழுங்கு வரிசையும், தெங்கின் உயர்ந்த உருவமும், பலா மரங்களின் குறிய தாளும் காணக் கிடைக்கும். L காவிரியின் கரைகளில் வளப்பமுள்ள பொழில்களைக் காணலாம். மா முதலிய பழங்கள் நிறைந்து பொலியும்; தாழை மொட்டலர்ந்து மணம் வீசும். பொழில்களின் அருகே வயல்கள் விளங்கும்; பொழில்களில் மாதவர்கள் தவம் செய்வர். 206. மக்களைக் குறிப்பன (224) (i) இறைவனை வணங்காதார் - எங்கள் பிரானை அறியாதார், உணராதார், கினையாதார், பாவாதவர், குழைக்கா கற் கடிமைக்கட் குழையாதார், சடையிற் கங்கை தரித்தானைச் சாரா கார், பனங்காட்டுர் பயில்வானுக்கு அடிமைக்கட் பயிலாதார், பெண் ஆண் ஆய பிரானைப் பேசாதார், பெற்ருென்றேறும் பிரானைப் பேசாதார்-எனக் குறிக்கப்பட்டுளர். (ii) கற்பண்புடைய மக்கள் அருமையாம் புகழார், எத்திசையும் புகழ் மன்னி இருப்பவர்கள், கறுவிலா மனக் கார்கள், குணத்தினர், குலவன், கோணுதார், சாது, சுற்றம் நன்கிளே பேணியே விருந்தோம்பு(வோர்), செம்மையாளர், கிடங்கொள் சிங்தை யினர், கிருவினர், துறந்தார், கற்பகம் என்றுணர்வார், நீதி நிறைந்தவர், நீற்ருரு மேனியர், நெறியில் வழுவா கியமத் தவர்கள், புண்ணியர், பெருங்குலத்தவர், மதியுடையவர், முழுநீறு பூசிய் முகிவர், மெய்த்தவத்தோர், மெய்யர், மேலையார், வஞ்சமற்ற மனத்தார், வள்ளல், விழுமிய தாய் புலவோர்த்கெலாம், வேத நீதியர்-எனக் குறிக்கப்பட்டுளர்.