பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) கோடி என்னும் கலங்களிற் குரவம் பொழில் இருக்கது. குரவு சிவபிரான் அணிவது. குருக்கத்தி: வெஞ்சமாக்கூடல் என்னும் கலத்தில் குருக்கத்தியின் மீது குயிலின் கூவல் எப்போதும் கேட்டது. குருந்து: இதன் அரும்பு பாம்பின் பற்களே ஒக்கும். குரும்பை. மாகர்களின் கொங்கைக்கு உவமை கூ-ஐப் பட்டது. s குவளை: நீர்ப்பூ கழனியில் கரும்பருகே மலரும்; குளங்களிலும் மடைகளிலும் மலரும்; கேன் கிறைந்த மலர்; ம்ாதர்களின் கண்ணுக்கு உவமை கூறப்படும் மலர். மாதர்கள் பொய்கையிற் குடைந்தாடக் குவளை மலரும். குன்றி: (குண்டுமணி) சிவபிரான் நிறம் இதன் நிறத் துக்கு உவமை கூறப்பட்டது. க.விளம்: சிவபிரான் குடுவது. H கேதகை: காழை பார்க்க. | கைதை (காழை பார்க்க); கடற்கரை மலர். இதன் இடையிடையே வெண் குருகுகள் உலவும். கொடி: கொடிகளின் இடையிருந்து குயில் கூவும். தேவியின் இடைக்குக் கொடி உவமை கூறப்பட்டது. கொடிகளில் ஏறி வண்டுகள் பண்செய்யும்; பவளம் கொடி யில் படரும். கொன்றை: (இதழி பார்க்க); நறுமணம். உடையது ; கார்காலத்தில் மலர்வது; கொத்தாக மலர்வது; வண்டுபண் எழுப்பி-மொய்ப்பது ; மாலைபோலத் ேொங்குவது; தீப்போல ஒளி வீசுவது; தூயது ; பொன் நிறத்தது, தேன் நிறைந்தது; மழைக்கு அரும்பு விடுவது; சிவபிரான் அணிவது. * : கோங்கம் : (கோங்கு) மணம் உடையது ; தளிர் விடுவது. s s f * f