பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (8) அடியார்களைக் குறிக்கும் சொற்கள் (4(8)) . அடியார், அடைந்தவர், அன்பர், உற்றவர், கலந்தவர், சார்ந்தவர், தொண்டர், கொழுபவர், கண்ணினர், நம்பினர், கினைப்பவர், பணிபவர், பத்தர், பாவிப்பார், வங்கிப்பார்போல்வன. 5. அடியாரும் சிவனும் (5) †. (1) பிரான் அடியார்களுக்கு அருளுதல் (5(i)) அடியார்களின் உடலுறு நோய்களைப் பெருமான் ஒழித்தருளுவார் ; அடியார்களே ஆண்டருளுவார்; தம்மை இச்சிக்கும் அடியார்களுக்கு அணியர் அவர்; அடியார்கள் பற்றும் செந்நெறி அவர் ; தம்மை அடைந்தவர்க்கு அமுது போன்றவர் ; தம்மை அடைந்தவர்களின் வினேகளை அறுத் தருளுவார் ; அவர்களுக்கு உதவுவார் ; தம் புகழ்மாலை களை மகிழ்ச்சியுடன் எண்ணி இன்புறுபவர்களின் உச்சியில் விளங்குவார். இருந்தும், கிடந்தும், கடந்தும் தம்மைச் சதா கினைப்பவர்களின் வினையைத் தீர்ப்பார்; இம்மையிலும் அம்மையிலும் அவர்களுக்கு இன்பம் ஊட்டுவார் ; நாக கண்டனே வாராமே காப்பார் ; குற்றமிலா அடியார்களுக்கு வீட்டின்பத்தை அளிப்பார்; உலகச் சிக்கலிற் படாது தம் முடைய மெய்யடியார்களுக்குப் பணிசெய்து வாழ்பவர் களுக்கு வழுவாநெறியைக் காட்டி அருளுவார் ; இந்த நிலை யாத வாழ்வை நீக்கி அருள்புரிவார்; தம்மைச் சரண் அடைந்தவர்களின் நெஞ்சிற் குடிகொள்வர்; தம்மைத் தொழுபவர்களின் துயரைத் தீர்ப்பார் ; தம்மை கண்ணின வர்க்கு நல்லவர் அவர் ; நம்பினவர்க்கு அருள்புரியும் அந்தணர் அவர்; தம்மைப் பாவிப்பவர் மனத்தில் ஊறும் தேன் அவர் ; பாடியாடும் பத்கர்மாட்டு அன்புடையவர்; பீடைதீர அடியார்களுக்கு அருள்புரிபவர் ; அடியார்களின் அஞ்ஞானத்தை நீக்கி அருள்புரிபவர் ; வெய்ய நாகத்தில் அழுந்தா வண்ணம் நமக்கு மெய்ந்நெறியைக் காட்டும் வேத முதல்வ்ர்; கொழுகின்ற அடியவர்களுக்கு வான் ஆட்சியைத் தருபவர்; வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாதவர். -