பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214. மாலை வகைகள் 28 கூறப்பட்டுவு. திருவிழிமிழலையில் வான் அசமகளிர் வந்து ஆடினா. - (2) நீராடல் ஆற்றிலும், பொய்கையிலும், குளத்திலும், மடுவிலும், மாகர்கள் நீரிற் குடைந்தாடுவர்; ஆறு-காவிரி, கொள்ளிடம் கூறப்பட்டுள. மடு-குளம்-பொய்கை : கலய நல்லூரிலுள்ள தாமரைப் பொய்கையும், திருச்சுழியலில் உள்ள கெளவைக் கடல் என்னும் திருக்குள்மும், திருநறையூரில் உள்ள மடுவும் சொல்லப்பட்டுள. (3) உறைவிடம் மாடமாளிகைகள் (திருகின்றியூரில்). ..(4) காதலர்ப் பிரிவு இதல்ை ஆடை சோரும், வளைகள் கழலும்: கொங்கைகள் பீர் நிறம் (பசலை) கொள்ளும்; காமத்தீ கனன்று மெய்யை உருக்கும். (6) தொழில், விளையாட்டு, வழிபாடு முதலிய மாதர்கள் பங்காடுவர் ; கிளியுடன் பழகுவர் ; மரப் பட்டை கொண்டு தாயம் (சூது) ஆடுவர்; திருக்கோயிலில் ஆடல்செய்து வழிபாடு புரிவர்; கூந்தலில் மலர் குடுவர்; படுக்கை அறைக்கு நறுமணப் புகை ஊட்டுவர் : கவண் வீசிக் குருவி, கிளி ஒட்டிப் புனம் காவல் புரிவர் ; வீட்டில் குருடாயுள்ளவர் எதற்கேனும் அழைத்தால், போ ! குருடா அழையேல்” எனப் பழிப்பர். 214. மாலை வகைகள் (282) அலங்கல், ஆரம், இண்டை, கண்ணி, கார், தெரியல், மாலை, வாசிகை - இவை மாலை வகைகளைக் குறிப்பன.