பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) வாளேகள் ஒடும்; கயல்மீன்கள் தாமரையின்கீழ் ஒதுங்கும். வயல்கள் வஞ்சியாது விளைவுதரும் ; பொன்போன்ற விளைவைத் தரும்; தண்ணென்று குளிர்ந்திருக்கும்; கடற். கரையிலும் வயல்கள் இருந்தன ; வயலருகே தாழை, மல்லிகை, சண்பகம் மலர்ந்திருந்தன ; (நெற்) களங்கள், ஆலைகள் பொலிவுற்றன. 224. வர்ணனைகள் (242) (1) எருமை m - எருமைகள் திரளாய்க் குளத்திற் படிய, சேலும், வா யும் அருகில் உள்ள வயலிற் பாயும். (2) கடல் 1. கடற்கரை மணலில் தெங்கின் பழமும் பன்ம் பழமும் விழும் ; சங்குகள், சிப்பிகள், வலம்புரிகள் தள்ளுண்ண, உயர்ந்த பாய்மரங்கள் உள்ள கப்பல்கள் அணுகும் தலம் மறைக்காடு (வேதாரணியம்). 2. மணிகளும், சுருமீனும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் தலம் மறைக்காடு. 3. கடற்கழியருகே மணம்வீசும் தாழையின் மடலில் வெண்குருகு அமரும் தலம் மறைக்காடு. 4 வலம்புரி, சலஞ்சலம் எனப்படும் உயரிய சங்கங்கள் கரையில் ஒதுக்கப்படும் கலம் மறைக்காடு. 5. தகரம், தாழை, ஞாழல் இவைகளின் கூட்டத்தின் இடையே முத்து, பவளம், மகரமீன், சுருமீன் இவைகளை க் கடல் அலைகள் ஒதுக்கும் தலம் மறைக்காடு. (3) கழனி ((பழனம்) வயல் பார்க்க) 1. தாமரை மலர்மேல் அன்னங்கள்' விளேயாடும்; பெருஞ்செந்நெல் கரும்புபோல உயர்ந்து நெருங்கி விளையும். சுழனி(யைக் கொண்டது) காட்ைடுமுள்ளுர்,