பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தேவார ஒளிதெறிக் கட்டுரை (சுந்தார்) 8. வழிபாடு-பூசைக்கு உரிய சாதனங்கள் (246(8) அன்பு, இசை (பண்கிறைந்த இசை), இருக்கு (மறை), இலை (நொச்சியம் பச்சிலை), சொன்மாலை - கோத்திர்ங்கள் பாடல்கள், நறுமலர்கள், நீர், பால் (ஆவின்பால்), தயிர்,நெய். தேவர்கள் பூஜைக்கு-செம்பொன், செம்பொற் பொடி, மணி, மந்திரம். - * - 4. வழிபாடு-வேளை (246(4)) காலை, பகல், உச்சி மூன்றுடோதிலும் வழிபாடு புரிதல் வேண்டும்; இரவில் செம்பொன் கொண்டு தேவர்கள் கொழுவார்கள். 229. வாத்தியங்கள்-வாத்தியங்களும் சிவனும் (247) கல்லவடம், கினே, குடமுழவு குழல், கொக்கரை, கொட்டு, கொடுகொட்டி, சங்கு, ச்ல்லரி, கக்கை, ககுணிச்சம், கண்ணுமை, தத்தளகம், கமருகம், காளம், துடி, துந்துமி, பறண்டை, பறை, பேரி, மணி, முரசு, முழவம், மோந்தை, யாழ், வீணே சொல்லப்பட்டுள. இவற்றுள் - குழலும் யாழும் மாதர் மொழிக்கும், துடிமாதர் இடைக்கும் உவமை கூறப்பட்டுள. முழவு பழைய மூங்கிலிற் செய்யப்படும். வண்டுகள் யாழ்போல ஒலிசெய்யும். திருவாரூரில் யாழ் ஒலியும், பனங்காட்டுரில் - பறை ஒலி - சங்கொலியும், கிருமுதுகுன்றத்தில் முரசொலியும், திருமுருகன் பூண்டியில் ம்ொந்தை வாத்தியத்தின் ஒலியும், காவலூரில் - குழலொலி - முழவொலியும், திருக்கடவூரில் - பறையார் முழவொலியும், கலயநல்லூரில் பேரி ஒலியும், திருப்பனேயூரில் - மாடமாளிகை கோபுரத்தின்டிேல் முழ வொலியும், யாழ் ஒயுேம் நிகழ்ர்தவை கூறப்பட்டுள். s