பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280. விசயன்-விசயனும் சிவனும் .258 e சிவுபிரானிடம் கொடுகொட்டியும் வீணையும் உண்டு. அவர் திருக்கரத்தில் தமருகம் உண்டு. வீணையுடன் வீதியில் விடை ஏறிச் செல்வார் பெருமான். ii. பெருமானது நடனத்தின்போது தக்கை, கண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, கொக்கரை, குடமுழா, முழவு, பறை, குழல் ஒலிசெயும். iii பெருமான் மகிழும் வாத்தியங்கள் கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம், துங்துமி, குடமுழா. | iw. திருவிழாவின்போது முழவும் குழலும் (நறையூர்ச் சித்தீச்சாத்தில்) ஒலித்தன. v. (அரங்கில்) மாதர்களின் நடனத்தின்போது குழல், முழவு, ஒலி செயும். 230. விசயன்-விசயனும் சிவனும் [248] விஜயன், பார்த்தன், அருச்சுனன்-என்னும் பெயர்கள் வங்துள. விற்போரில் விருப்பம் உள்ளவன் என்று பேர்பெற்ற விசயனுக்கு அருள் செய்யக் கருதிச் சிவபிரான் ஒரு வீர வேடன் போல உருக்கொண்டார் ; கையில் வில் ஏந்தினர்; தேவியும் தாமுமாய் மகிழ்ச்சியுடன் காட்டில் நுழைந்தார். ஒரு மாயச் செய்கையை மேற்கொண்டார். ஒரு கொடிய கொம்புள்ள பன்றியை வேகமாய்த் துரத்திச் சென்ருர் ; விஜயன் தவமிருந்த இடத்தை அணுகினர்; காம் இன்னு. ரென். விஜயன் நாடாத வகையில் அவிைேடு உள்ளன் புடன் போர் புரிந்தார். அவன் தேரீள்மீது பல கூரிய அம்புகளை பாய்ச்சினர்; ஆவன் கவிச்சை அழித்தார்.