பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 24, 1. வேடர்களின் நாகரிக நிலை (192) வழிப்போக்கர்களைக் குத்தி மோதி மனம் புண் படும்படி பேசி, அவர்களுடைய ஆடை உடைகளை வேடர்கள் கொள்ளை கொள்வர். 241-ஏ. வேதம் - மறை (229) (தலைப்பு 2.11 பார்க்க) 242. வேள்வி (259) இறைவனைக் கருதாத கக்கன் வேள்வியில் அவி உண்ண வந்த தேவர்கள் உருண்டோட உதைத்து உகந்தவர் சிவபிரான். (தாருக வனத்து) மாதவத்தினர் செய்த கழல் வேள்வியி னின்றெழுந்த சிங்கம், புலி, யானே இவை அலறப் பிளந்து அவையிற்றின் ஈர உரியைப் போர்த்துக் . கொண்டனர் பெருமான். இருக்கு மறை வல்ல அந்தணர்கள் ஏழு சுரங்களுடனும் ஒதி, எரி ஒம்பி, வேள்வி இயற்றி உலகுக்குச் செல்வத்தை வழங்கினர் கானட்டுமுள்ளூரில். - J, U ILI நல்லூரில் கலைகள் வல்லவராய்க், கலியின் கொடுமையைக் கடிய வல்லவரான அந்தணர்கள் செய்த வேள்வியின் ஒமப்புகை மேகம்போல மேலெழுந்து அழகு தந்தது. திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) வேள்வியின் முழக்கம் சதா ஒலித்தது. திருநனிபள்ளியில் அந்தணர் வேள்விகள் இயற்றி எரி மூன்றும் ஒம்பினர். செம்பொன்போல விளங்கின மகளிர் வாசம் செய்யும் திருவிழிமிழலையில் நம்பினர்க் கருள் செய்யும் அந்தணர் நான்மறைக்கு இடமாய வேள்வியை இயற்றினார்.