பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. ஜீவராசிகள் *269 11. நீர் வாழ்வண் (261-11) (1) ஆமை சிவபிரான் அணிந்துள்ள (ஒட்டுக்கு உரிய) ஆமை இளஆமை, எழில் ஆமை என்று கூறப்பட்டுளது. அதை அவர் தமது மார்பில் காலிபோல அணிந்துள்ளார். "(2) தேரை யானைப்படை முதலான படைகளுடன் உலகம் o யாவற்றையும் ஆளும் ஆட்சியும் ஈற்றில் (பெண்) "தேரை யின் வால்போல மறைந்துபோகும் தன்மையதே. (3) கண்டு அலவன், ஞெண்டு, நள்ளி குறிக்கும். கழனியில் வண்டு இசைபாடத், தாமரை மலரில் கண்டு உறங்கும். (4) மீன் வகைகள் என்பன கண்டைக் கயல், கிளி, குருவி, கெண்டை, சள்ளே, சுறவம், சேல், மகரம், மலங்கு, வால், வாளே-எனும் மீன் வகைகள் குறிக்கப்பட்டுள. (i) கயல் கயலும் சேலும் வயல்நீரில் விளையாடும். எருமை நீரில் இறங்கக் கயல்மீன்கள் தாமரைமலரை நெருங்கி ஒதுங்கும்; அப்போது மலர்மீதிருந்த வண்டின் கூட்டம் கஃலந்து ஒடும். எருதின் இடிபோன்ற முக்காரத்தைக் கேட்டு அச்சம் கொண்டு கயல்மீன் தாமரையில் ஒதுங்கி மறையும்; வண்டு மதுவுண்டு 'பண்பாடக் கயல் மீன் வயலில்" துள்ளிப்பாயும்.

  • தேரை பிறக்கும்போது மீன் உருவாய் வால் தெரியும் ; பின்பு தவாே உரு வந்தவுடன் வீால் மறைந்துபோகும் என்ப.