பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ வாாச கள 4° (5)అణ | உயர்ந்த குங்குமத்தைச் சுமந்து இளைப்பு:றினும் கழுதைக்குப் புகழ் கிட்டாது. o (கழுதையை உலகோர் புகழமாட்டார் என்றபடி). (o) குதிரை பரிமா, புரவி, மா - என்பன குதிரையைக் குறிப்பன. காற்றின் வேகம் கொண்ட கடிய குதிரைகள் உண்டு. (கிரிபுரம் எரித்தபோது) வேதங்கள் குதிரையாய் அமைந்தன. -- (7) குரங்கு 1. கடுவன், கலை, திரங்கல் முகவன், மந்தி, முசுக்கலை, வானாம் - என்பன குரங்கைக் குறிப்பன. = 2. கூழைக் குரங்கு, கூழை வானரம் - என்பன குட்டையாயுள்ள குரங்குகளைக் குறிக்கும். 3. (i) குரங்குகள் சோலைகளிலும் வயல்களிலும் குதி கொள்ளும். ■ - - (ii) குட்டைக் குரங்குகள் தாழைப் பொழில்களில் உள்ள இடைவெளியில் நுழைந்து வாழைப் பழங்களைப் பறித்து உண்னும் (வேகாரணியத்தில்). (iii) மங்களில் இருந்து மயில்கள் ஒசை செய்யக், குரங்குகள் மண்டபத்தின் மீதும், மாடமாளிகை மீதும், கோபுரத்தின் மீதும் பாய்ந்து புகும் (திருப்பனையூரில்). (iv) ஆண் குரங்கு உண்ணப் பழங்களைத் தேடிச் சென்ற மலைப்புற மந்திகள் (பெண்) குரங்குகள், முன்ன தாக இறைவனே அடி தொழும் (விருத்தாசலத்தில்); சல புட்பம் இட்டுச் சந்திகள் தோறும் இறைவனே வழிபடும் (அவிநாசியில்).