பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இலக்கண விசேடங்கள் 17 16. இசையும் பண்ணும் (15) கிருஞானசம்பந்தர் நல்ல இன்னிசை பாடித் தமிழைப் பாப்பினர் , (சுந்தரரும்) ஏழிசைத் தமிழால் கம் பாடல் களைப் பாடினர். பண் இசை மொழியால் இறைவனைப் பலரும் ஏத்திப் பணிவார்கள். பண் நிறைந்த மொழியாள் கே.வி. பண் மயமாம் மொழியாள் பரவை. தொண்டர்கள் 1றையும் முழவும் ஒலிக்கப் பாடல்கள் பயில்வார்கள். வண்டுகள் பண்பாடும்; நீலோற்பல மலரில் இருந்து பல வகைப் பண்களைப் பாடும்; ஆண்வண்டும் பெண்வண்டும் மது உண்டு இன்னிசைப் பண்களைப் பாடும்; கொன்றைமலரில் அமர்ந்து வண்டுகள் பாடும்; சோலைகளில், பொழில்களில் புதுமணம் வருதலை அறிந்து அங்குள்ள தேனே விரும்பிச் சென்று பாடல்வண்டுகள் நாதசீகங்களை எழுப்பும். ஏழிசை, ஏழ்நரம்பின் ஒசை, ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ், பண் சீகாமரம், குறிகொள் பாடல்களின் இன் னிசை, சந்தம், இசைவல்லவர்கள், இலயம், சதி, தமிழும் இசையும், திவ்யகீதங்கள், தமிழ் வல்லவர்களின் ஏழிசை, ஏழ்நரம்பின் ஒசை, பண்ணுர் பாடல்கள், பண்ணுர் தமிழ், பண் காட்டும் யாழ், மருதப் பண், வேதகேங்கள் கூறப் பட்டுள. - 17. இந்திரன் (16) (சிவனும் இந்திரனும்-என்னும் தலைப்பு 90-ம் பார்க்க) உம்பரார் கோன், தேச வேந்தன், வானவர் கோன், என்னும் பெயர்களால் இந்திரன்-குறிக்கப்பட்டுள்ளான். 18. இலக்கண விசேடங்கள் (18) சுந்தராது திருவாக்கில் -அசைச்சொற்கள், அணிகள், இடைநிலைத்தீபம், எதுகை-மோனே விசேடங்கள், போலி, மரூஉ, முதல்-இடை-கடைக் குறைகள், முரண்தொடை, வேற்றுமை உருபு மயக்கம்-முதலிய இலக்கண விசேடங் களைக் காணலாகும். (ஒளிநெறியிற் பார்க்கவும்.) தே. ஒ. க.-ா-2 f