பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்)

  • :

ஆட்சியும் கிடைப்பது நிச்சயம் ; நரகில் இடர்ப்ப்டீர், கவலைகள் சேரா , உய்தி கிடைக்கும். H 24. உயிர் (24) (சிவனும் உயிரும்-என்னும் தல்ைப்பு 98-ம் பார்க்க) ஆருயிர், உடலத்து உயிர், ஏழுலகத்து உயிர், ஒன்றலா உயிர் (ஒன்றுதல் - பொருந்துதல்), பல்லுயிர், பிறந்த உயிர், வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர், உயிர் போகும் நாள், உயிர் உடலைவிட்டுப் பிரிந்து போவது நிச்சயம்-என்றெல்லாம் உயிர் விளக்கப்பட் டுளது. -- 25. உலகங்கள் (25) உலகங்களுள்-மண்ணுலகம், விண்ணுலகம், சிவ லோகம், பாதலம், கூறப்பட்டுள. உலகு-மூன்று என்றும், ஏழு என்றும், கடலால் சூழப்பெற்றது என்றும், நீதிவேதியர் கிறை புகழ்கொ ண்டது என்றும், நிலைத்திராதது என்றும் குறிக்கப்பட்டுளது. விண்ணுலகம்-அமரலோகம், இமையோர் உலகு: பொன்னுடை உலகம், வான் உலகு, வான நாடு என்றும், சிவலோகம்-சிவபிரானது அருமை உலகம் என்றும், பொன்னுலகம் என்றும், பாதலம்-சேடன் உறையும் இடம்-என்றும் அறிவிக்கப்பட்டுள. உருத்திரலோகமும் தவலோகமும் பரலோகமும்--கூறப்பட்டுள. |* 26. உலோகம் (26) இரும்பு- சூலம் இரும்பில்ை ஆயக. "இரும்புண்ட நீர் என்பது, ஒரு பழமொழி. இதன் பொருளை, இரும் புண்ட நீம்ென என்னை உள்ாேங்கி இருந்தனன் நந்தி’ என்னும் கிருமந்திரம் (2592) விளக்குகின்றது.