பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40s தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (3) பாம்பு. (4) புலித்தோல் - புலித்தோல் மேல் அரவக் கச்சு. (5) மரவுரி. (6) துகில் - பட்டு. அரையில் அசைத்த கீள் கோவண்க்கைப் புலித்தோல் சூழ்ந்திருக்கும் ; அதன்மேல் அரவு கட்டப்பட்டுளது. பெருமானுக்குப் பட்டுத் துகில் கொண்ட வேடமும் உண்டு; அரையில் கட்டப்பட்டுள்ள அரவு ஒற்றைப் படம், கொண்டது , செங்கண் கொண்டது; வெண்ணிறக்கது: மணி நாகம் அது; விஷம் வாய்ந்தது , செருக்கு (ஆங்கா) வாயினது; பெருமானுடைய அரை நானும் படப் பாம்பே; மரவுரியும் அவர் அரையில் அணிவர். 8. சிவபிரான் கழுத்தில் அணிவன (64) :மார்பில் அணிவன” என்னும் தலைப்பு 59-8 பார்க்க 4. சிவபிரான் காதில் அணிவன (65) குண்டலம், குழை, கோடு: இவை தம்முள், பிரான் அணிந்துள்ள குழை - கனகக்(பொன்)குழை, சங்கக் குழை, மகரக் குழை, வெண்குழை-என விளக்கப்பட்டுளது. குழை பிரானுடைய ஒரு காகில் விளங்கும்; மற்முெரு காதில் தோடு பொலியும்; அது சுருள் வெண்தோடு, குழை தழுவு காகில் கோளாவமும் விளங்கும். - 5. சிவபிரான் காலில் அணிவன (66) கழலும், சிலம்பும்:-பலிக்குப் போகும்போது கழலும் சிலம்பும் ஒலிக்கப் பெருமான் போவார்; அவர் ஆடும் பொழுது கழல் ஒலி செய்யும். 6. இவழிரான் கையில் அணிவன :67) பெருமாள்வடைய திருக்கரங்களில் விளங்குவன:-எரி, கட்டங்கம் (மழுவகை), கபாலம் (தலை ஒடு வெண்டலை),