பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[* r 48. தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (wi) அவர் வீற்றிருக்கும் கலங்கள் எனக் கூறப் பட்டவை:-அதிகை, ஆரூர், இடையாறு, ஊறல், ஒற்றியூர், கச்சி, கடவூர், கருப்பூர், கலயநல்லூர், கழிப்பாலை, கழுக் குன்றம், காழி, கேதாரம், கோடி, கோவலூர், சுழியல், சோபுரம், சோற்றுத்துறை, துருத்தி, நறையூர், நன்னிலம், நனிபள்ளி, காகை, நாவலூர், நின்றியூர், பழனம், பனங் காட்டுர், புனவாயில், பூவணம், மறைக்காடு, வலம்புரம், விழிமிழலை, வெண்பாக்கம், வேள்விக்குடி. இவற்றுள்-அதிகை - பெருமானுக்கு என்றும் இருக்கை என்றும், ஆரூர் (திருமூலட்டானம்) அவர் வாழ்பதி, அவர் விரும்பும் இடம் என்றும், திரு ஊறலில் நீங்காது இருப்பர் என்றும், ஒற்றியூர் அவரது ஊர் அன்று ; ஆயினும் அவர் கருதும் இடம் ஒற்றியூர் என்றும், அவர் கருப்பூர் விருப்பன் என்றும், கலய நல்லூர் அவர் உமையவளோடும் மேவிய ஊர் என்றும், கழுக்குன்றம் அவர் முதலிடமாகக் கொண்ட பழைய ஊர் என்றும், காழி அவர் மதித்திருக்கும் இடம் என்றும், கொடியார் பல வேடர்கள் வாழ்கின்ற கோடி என்னும் தலத்தில் அன்புடன் கோயில் கொண்டுள்ளார் பெருமான் என்றும், திருச்சுழியல் என்னும் தலத்தில், தாம் பேரூரில் (மேலைச் சிதம்பரத்தில்) உகந்திருப்பதுபோல உகந்து இனிது உறைகின் ருர் பெருமான் என்றும், சோபுரம், சுழியல், ஒற்றியூர், திருவூறல் என்னும் தலங்களே விட்டு நீங்கார் பெருமான் என்றும், நன்னிலத்துப் பெருங்கோயிலில் விருப் புடன் இருப்பர் என்றும், நாவலூர் கான் நாதனுக்கு ஊர் என்றும், திருப்பூவணம் பெருமான் மிக விருப்புடன் இருப்பாகக் கொண்ட ஊர் என்றும், திருவீழி மிழலை அவர் தேவியுடனே உறையும் திருப்பதி என்றும் - விளக்கங்கள் தரப்பெற்றுள்ளன. so (vii) GroAp முதலிய கேவர்கணங்களிடத்தும், நல்ல மலர்களிடத்தும், கொன்றை மலரிலும் வாசம் செய்வர் பெருமான். o (viii) மில உச்சியிலும் வானிலும் வாழ்வர்.