பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறிக் கட்டுரை(சுந்தார்)

25 அல்லப்ல் அறுப்பார் இடர், கவலை, துயர், தீர்பா + f 10. , ர் (82(12), (60) திருமால், பிரமன், முதலியோர் சிந்தனை செய்ய அவர்க ளுடைய கடுமாற்றத்தை இறைவர் அறுப்பார் ; தம்மைத் துதிக்கும் அடியார்களின் துன்பத்தை ஒழிப்பார்; கஷ்டங் களையும் பிணிகளையும் களை வார்; கற்ற பெரும் புலவாணர் களின் துன்பத்தைப் பெரிதும் ஒழிப்பார்; காலிையில் எழுந்து தொழுகின்ற அடியார்களின் கவலையைக் களைவார் ; இடர்கள் வாராவண்ணம் காத்தருளுவார் ; இடர்களை முதலில் வைப்பார், பின்னர்க் களைந்து அருளுவார்; இங்ஙனம் அல்லலை அவர் ஒழிப்பரேனும் உலகம் அவரைப் ‘பேயனே பித்தனே' என அழைக்கும். 11. அழகர் (82(18)) கற்றைச் சடைமீது கங்கையைத் தாங்கும் அழகர் இறைவர் ; புலித்தோல்மீது ஆடு பாம்பை அரையிற் கட்டி யுள்ள அழகர்; தூய திங்களைச் சூடியுள்ள அடையாளக்கார அழகர் அவர். 12. அற்றவர்க் கருளல் (82(14) (யான், எனது என்னும் எண்ணம்) அற்றவர் களுக்கு அருள்புரிவார் இறைவர். é 18. அறம் (82(15) அறத்தின் இருப்பிடம் இறைவர். 14. அறிதற்கு அரியர் (82(16) மறை வல்ல அந்தணர் இடைவிடாது பணிந்தும் அவரால் அறியப்படாத நிலையினர் இறைவர். தேவராலும், யாவராலும் அறியப்படாதவர் அவர். அவரை நினைந்து அழுத கண்ணினராய அடியவரால் அன்றிப் பிறரால் அறியப்படாதவர் அவர்.