பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68" தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 73. சிவபிர்ான் - நஞ்சுண்டது (84) அழகிய பெரிய மலையை மக்காக நாட்டி, அந்த மத்தை விஷப்பாம்பாம் கயிற்ருற் சுற்றி, வானவரும், தானவரும் ஒன்றுகூடிக் கடைந்தனர். அங்கனம் கடையக், ! கரிய, பெரிய, காளகூட விஷம் எழுந்தது ; அதைக் கண்ட தேவர்கள் இரிந்து ஒடினர் ; பெருமானிடம் சரண் புகுந்தனர்; திருமாலும், பிரமனும், இந்திரனும் மந்திகம் ஒகிப் பெருமானே வணங்கினர். தேவர்களாம் வஞ்சகர்கள் தங்களே அந்த எரிவிஷம் அடராதிருக்கவேண்டி நீ உண்க’ எனப் பெருமானை அடிபாவி வேண்டினர். அந்த நஞ்சு உலகையே அழிக்கும் எனத் தெரிந்து, யாவரும் உய்ய, அதை அமுதாகத், தடை ஒன்றும் கூருது உண்டனர் பேதைப் பெருமான்', தேவி அஞ்சினள் ; பெருமான் அந்த நஞ்சைத் தமது கண்டத்தே கிறுத்தி வைத்தனர் ; கண்டம் கறுத்தது ; ஏனே அங்கனம் கண்டத்தில் விஷத்தை நிறுத்தினர். விஷத்தை உண்டும் பெருமான் இறவாது என்றும் இருக்கின்றனர்; அங்கனம் தாம் நஞ்சை உண்டு தேவர்களுக்கு அமுதை ஈந்து அருள்புரிந்தார் பெருமான். நீர் உண்ட விஷத்தின் கொடுமை உம்மை உமது இடத்தில் (கயிலையில்) இருக்க ஒட்டாத காரணத்தாலோ, பெருமானே! நீர் இங்கே கடற்கரை நாகையில் (ாக பட்டினத்தில்) வந்து அமர்ந்துள்ளீர்-என்று பெருமா லுடன் அசதி ஆடுகின்ருர் சுந்தார். - பெருமான் உண்ட நஞ்சு-"எரியும் நஞ்சம், எழுகடல் நஞ்சு, கருநஞ்சு, காளகூடம், நீலமால் விடம், பெரிய நஞ்சு, மொய்த்தெழுந்த வேலைவிடம்' என விளக்கப்பட்டுளது. 74. சிவபிரான் நடம் (85) கூத்தன், கூத்துடையான், கட்டம் ஆடி, கடமாடி எனச் சிவபிரான் குறிக்கப்பட்டுள்ளார். அவரது கால் கிருத்தஞ் செய் கால்; அவரது திருக்கரத்தில் தமருகம், எரி அகல், கரிய பாம்பு உள. '