பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. சிவபிரான் நடம் 69 அவுர் அண்டத்தின் அப்புறத்தும் ஆடுவர்; இரவில், ாள்ளிருளில் ஆடுவர்; இடுகாட்டில், புறங்காட்டில், சுடலையில் (சுடுகாட்டில்) ஆடுவர் ; எரிதலைப்பேய் புடைசூழ ஆடுவர் : காடு அாங்காக, கைகள் எட்டுடனே, லயம் (சுருதி), சதி (காள ஒத்து) பிழைபடாகவண்ணம் ஆடுவர் ; அவியா அனல் எங்கி இரவில்"கரி ஊளையிடும் புறங்காட்டில் ஆடுவர்; சம்முடைய எட்டுத் தோள்களை வீசி ஆடுவர்; எரிகொண்டு ஆடுவர் ; எலும்பு மாலையும், எருக்கு மாலையும் அணிந்து ஆடுவர் ; காலில் உள்ள கழல் ஒலிக்கக், குழை அசையச், சடை காழச், சடை எட்டும் சுழல, கிருமாலும், பிரம லும் அறியா வகையில் ஆடுவர் ; தம்மைக் காதலுடன் கருதும் கொண்டர்கள் ஏவல் செய்ய, துள்ளிப்பாட, ஆடுவர் ; நீறணிந்து ஆடுவர் ; பாடி ஆடுவர்; புலித்தோல் உடைமேல் பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி கின்று இடுகாட்டில் ஆடுவர்; தேவி காணத், தேவி மகிழத், தேவி உடன் ஆட, மயானத்தில் பூகங்கள் தம்மைச் சூழ ஆடுவர்; பிறையும், கங்கையும் சூடி, உலகேத்தப், பூதங்கள் பாடப், பறை முழக்க, நள்ளிருளில் கட்டம் ஆடுவர் துட்டரான பேய்கள் குழப், பேய்க்கணம் பாட, பிணம் இடுகாட்டில் அப் பேய்களோடும், நள்ளிருளில் ஆடுவர் : தக்கை (பறை வகை), தண்ணுமை (மத்தளம்), தாளம், வீணை, தகுணிச்சம் (ஒருவகைப் பறை), கிணை (உடுக்கை), சல்லரி (கைத் தாளம்), கொக்கரை (ஒருவகை வாத்கியம்), குடமுழவு (முழவு வகை) இவைகளின் இசைகூடப் பாடி ஆடுவர்; பறையும் குழலும் பாடலுக்கு ஒக்க ஒலிக்க, முதுகாட்டில் ஆடுவர்; திரிபுராதிகள் மூவரில் ஒருவன் மணிமுழா முழக்கக், கிரிகாட்டில் தேவி கண்டு மகிழ் ஆடுவர்; கொதித்த கோபத் துடன் வக்த காளியின் கோபம் கணிய ஆடினர். 2. பிரான் ஆடும் ஆடல்களில் புயங்க நடம், கொடு கொட்டி ஆடல், பாண்டரங்க நடம் கூறப்பட்டுள. 3. பிரீான் ஆடல்புரிந்த தலங்கள் : ஆரூர், தில்லை. அம்பலம், திருப்பனையூர், மேலைத்தில்லை (மேலே-மேற்குச் சிதம்பரம்) எனப்படும் பேரூர்,